'ராட்சசன்' படத்தின் மிரட்டல் VFX காட்சிகளை வெளியிட்ட அமலாபால்!

By manimegalai aFirst Published Dec 27, 2018, 7:21 PM IST
Highlights

குறும்பட இயக்குனரான ராம்குமார் 'முண்டாசுப்பட்டி' எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டு இவெளிக்கு பிறகு இவர் தனது ஆஸ்தான ஹீரோவான விஷ்ணு விஷாலுடன் இணைந்து  திரைப்படம் ராட்சசன். 

முதல் படத்தை காமெடி படமாக கொடுத்த ராம்குமார் இரண்டாவது படத்தை த்ரில்லராக கொடுத்துள்ளார். அதிலும் சைக்கோ கொலையாளி தொடர்புடைய படம். 

இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்திருந்தார். இந்த வருடம் வெளியான படங்களில் சிறந்த படங்களில் ஒன்று என இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற VFX காட்சிகள் சம்பந்தமான வீடியோ ஒன்றை நடிகை அமலாபால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

click me!