
'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம். சமீபத்தில் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை போட்டோ ஷூட் வெளியிட்டு தெரியப்படுத்திய நிலையில் தற்போது குழந்தை பிறந்த தகவலை கவிதையோடு தெரிவித்துள்ளார்.
இவருக்கு சீரியல் நடிகர் என்கிற அறிமுகத்தை கொடுத்தது, 'வம்சம்' சீரியல் தான் என்றாலும், விஜய் டிவியில் வெளியான ஒளிபரப்பான "தமிழ் கடவுள் முருகன்" தொடரில், சிவன் மற்றும் வீரபத்திரன் கேரக்டர்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார். தொடர்ந்து சன் டிவியிலும், ரோஜா, சந்திரா குமாரி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தற்போது மிர்ச்சி செந்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும், 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருடைய திருமணம் கடந்த ஆண்டு கொரோனா நேரத்தில் நடந்ததால், மிகவும் பிரமாண்டமாக திருமணத்தை நடத்தாமல் எளிமையான முறையில் நடத்தினர். எனினும் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்டும் வைரலானது. இந்நிலையில் நேற்று இவரது மனைவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கவிதை துவமாக புகைப்படம் வெளியிட்டு பகிர்ந்துள்ளார்...
இதுகுறித்து அவர் கூறுகையில், அகத்தை ஆட்கொண்ட அன்பே
தாயினுள் தோன்றிய தவமே
தந்தையின் தோளில் சுகமே
பெற்றோரின் பொக்கிஷம் நீ!
வாழ்வின் அர்த்தம் நீ!
காதலின் "சகா"ப்தம் நீ!
யாவும் நீ!யாதும் நீ! SAGA நீ!" என கூறியுள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.