முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி நேரில் சந்தித்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியிருந்தார். அதில், "அன்புக்குரிய தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என பாராட்டியிருந்தார்.
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி நேரில் சந்தித்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி மலர் கொத்து கொடுத்து ஸ்டாலினை வாழ்த்திருப்பது தமிழக அரசியலில் உற்று நோக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
தம்பி பவன் கல்யாண், அண்ணன் மெகா ஸ்டார் என இருவருமே திரையுலக நட்சத்திரங்களாக இருந்தாலும், அரசியலும் கால் பதித்தவர்கள். மெகா ஸ்டார் முன்னாள் எம்.பி., பவன் கல்யாண் ஜனசேனா கட்சியின் தலைவர் எனவே இருவரும் மாறி, மாறி ஸ்டாலினை புகழ அரசியல் காரணங்கள் ஏதாவது இருக்குமா? என்ற சந்தேகம் எழாமல் இல்லை.