ஒன்றா... இரண்டா... விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 சீரியல் நடிகைகளா? 'விக்ரம்' படத்தின் வேற லெவல் அப்டேட்!

By manimegalai aFirst Published Sep 1, 2021, 7:26 PM IST
Highlights

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் ஏற்கனவே, மிக முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மட்டும் மூன்று நடிகைகள் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
 

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் ஏற்கனவே, மிக முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மட்டும் மூன்று நடிகைகள் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

'மாஸ்டர்' பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 3 முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'விக்ரம்'. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங்கின் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் தொடங்கியது. இதில்  இயக்குனர் லோகேஷ், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். 'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் தற்போது இந்த படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் கடந்த  ஜூலை 10ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. இதில், விஜய் சேதுபதி, கமல், ஃபகத் பாசில் ஆகிய மூவரின் முகமும் இடம் பெற்றிருந்தது. உலக நாயகன் உடன் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் நடிகர்களான ஃபகத் பாசில், விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

தற்போது படப்பிடிப்பு படுஜோராக நடந்து வரும் நிலையில், அடுத்தடுத்து இந்த படத்தில் ஒவ்வொரு நடிகர்களாக இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் தான் நடிகர் நரேன் இந்த படத்தில் இணைந்ததை நடிகர் கமல்ஹாசனை தெரிவித்து அவரது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டார்.

இதை தொடர்ந்து 'விக்ரம்' படத்தின் அடுத்த வேற லெவல் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூன்று சீரியல் நடிகைகள் நடிக்கிறார்களாம். அதில் ஒருவர் ஷிவானி என்பது ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், அவரை தொடர்ந்து நடிக்க உள்ள மற்ற இரு நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி சமீபகாலமாகவே விதவிதமான கவர்ச்சி போட்டோ ஷூட் வெளியிட்டு படவாய்ப்பு தேடி வந்த மகேஸ்வரியும், விஜய் டிவி பிரபலமுமான மைனா நந்தினியும் தான். 

 

click me!