ஆல்யா மானசா பிறந்த நாளுக்கு சஞ்சீவ் கொடுத்த சர்பிரைஸ்..! வெளியான கியூட் வீடியோ... குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

Published : May 27, 2020, 05:21 PM IST
ஆல்யா மானசா பிறந்த நாளுக்கு சஞ்சீவ் கொடுத்த சர்பிரைஸ்..! வெளியான கியூட் வீடியோ... குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

சுருக்கம்

குழந்தையை பெற்றெடுத்ததும் ஆல்யா மானசா முதல் முறையாக கொண்டாடும் பிறந்த நாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சஞ்சீவ். இதுகுறித்த விடியோவை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஆல்யா.

சின்னத்திரையில் இணைந்து நடிப்பவர்களை உண்மையாகவே, வாழ்க்கையிலும் இணைத்து, அழகு பார்த்து வரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ராஜா ராணி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யாவின் மனைதை ஈசியாக கொள்ளையடித்தார் இந்த சீரியல் நாயகன் சஞ்சீவ். 

காதல் முற்றியதும்  இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றினர். ஆரம்பத்தில் எப்போதும் போல், காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை என மறுத்தாலும், பின் தங்களுடைய காதலை ஒப்புக்கொண்டனர்.

மிக பிரமாண்டமாக நடந்த விருது விழா ஒன்றில், மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள், திருமணத்தை மட்டும் எளிமையாக செய்துகொண்டனர். பின் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்ததை தொடர்ந்து இப்போது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையே பிறந்து விட்டது.

இந்நிலையில் குழந்தையை பெற்றெடுத்ததும் ஆல்யா மானசா முதல் முறையாக கொண்டாடும் பிறந்த நாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சஞ்சீவ். இதுகுறித்த விடியோவை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஆல்யா.

ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களே ஆகும் நிலையில், அடிக்கடி தங்களுடைய குழந்தையின் புகைப்படம் மற்றும்,  இருவரின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஆல்யா இந்த வருட பிறந்த நாளுக்கு கணவர் தனக்கு கொடுத்த சர்பிரைஸ் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில்,  சஞ்சீவ் தான் வசித்து வரும் அபார்ட்மென்டின் மொட்டை மாடியில்... மின் விளக்குகள் அலங்கரித்து, பாட்டு குழுவினர் ஏற்பாடு செய்து... கேக் வெட்டி தன்னுடைய மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வீடியோ இதோ:

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மேக்கப் தொல்லை எனக்கு இல்லை... நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்
ஆஸ்கர் ரேஸில் அடுத்த லெவலுக்கு சென்ற ஒரே ஒரு இந்திய படம் - விருதை தட்டிதூக்குமா?