என்னது பிரபல தொகுப்பாளினி டிடி-க்கு இப்படியொரு நிலையா?... போட்டோவுடன் வெளியான சோகமான செய்தி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 29, 2020, 06:40 PM IST
என்னது பிரபல தொகுப்பாளினி டிடி-க்கு இப்படியொரு நிலையா?... போட்டோவுடன் வெளியான சோகமான செய்தி...!

சுருக்கம்

கலகலப்பாக அங்கும், இங்கும் ஓயாமல் பிஸியாக இயங்கி கொண்டிருந்த இவரால் வீட்டில் ஒரே இடத்தில் இருக்க முடியவில்லை போல. எங்கேயோ ஏடாகூடமாக விழுந்து இடது காலில் கட்டுடன் சுற்றி வருகிறார். 

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது 'டிடி' தான். இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும்.15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது. 

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம்  டிடி ஆடையின் அளவை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டே செல்கிறார். பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார். கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், டிடி-யில் வெளியில் எங்கும் ஷூட்டிங் செல்லாமல் உள்ளார். கலகலப்பாக அங்கும், இங்கும் ஓயாமல் பிஸியாக இயங்கி கொண்டிருந்த இவரால் வீட்டில் ஒரே இடத்தில் இருக்க முடியவில்லை போல. எங்கேயோ ஏடாகூடமாக விழுந்து இடது காலில் கட்டுடன் சுற்றி வருகிறார். 

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இடது காலில் கட்டு போடப்பட்டிருக்கிறது, கையில் வாக்கரை வைத்துக் கொண்டு மெதுவாக நடக்க முயற்சிப்பது போன்று உள்ளது. கடந்த சில வாரங்களாக இப்படித் தான் செல்கிறது. லாக்டவுனுக்கு பிறகு நடந்தது. எனது இடது காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு மிகுந்த வலி நிறைந்ததாக இருக்கிறது. என் மனதை அதிலிருந்து மாற்றுவதற்காக எழுதுவது, ஓடிடி ப்ளாட்பார்மில் படம் பார்ப்பது போன்ற விஷயங்களை செய்து வருகின்றேன். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

ஓரளவுக்கு திரும்ப பலம் பெற்றதால் தான் இந்த பதிவை எழுதுகிறேன். இதில் இருந்து சீக்கிரமே மீண்டு வந்து உங்களை சந்திக்கிறேன். எனக்கு தெரியும் என்னை நேசிக்கும் மக்கள் அனைவரும் இதை கேள்விப்பட்டு மன வருத்தம் அடைவீர்கள். மருத்துவர்கள் மற்றும் எனக்காக இங்கு இருக்கும் 4 பேருக்கும் எனது அளவு கடந்த அன்பு மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?
ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!