முதல் பிரமோவில் வேட்டையை ஆரம்பிக்கலாமா என துவங்கிய கமல் தற்போது மிருகங்களுடன் தெறிக்கும் டயலாக் பேசி உள்ள ப்ரோமோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்து 2017 ஆம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பாக தொடங்கியது. மற்ற மொழிகள் போலவே தமிழிலும் முன்னணி நாயகரை தொகுப்பாளராக மாற்ற எண்ணிய பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம் கமலஹாசனை களம் இறக்கியது. முதல் சிசனிலேயே மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டி எல்லாம் பேமஸ் ஆனது.
வித்தியாசமான ரியாலிட்டி ஷோவான இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஒரு தனிமையான வீட்டிற்குள் 100 நாட்கள் இருக்க வேண்டும் அந்த வீட்டில் இருக்கும் வரை சமூகத் தொடர்பு எதுவும் அவர்களுக்கு வழங்கப்படாது. கழிவறை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படுமவர். இறுதியாக ரசிகர்களில் ஆதரவை பொறுத்து வின்னர்கள் அறிவிக்கப்படுவர். இந்த நிகழ்ச்சி மிகுந்த சுவாரசியமிக்கதாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வந்தது. முதல் சீசனில் டைட்டில் வின்னராக ஆராவும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
மேலும் செய்திகளுக்கு...அஜித்தின் ஆர்வத்தை கையில் எடுத்த ரம்யா பாண்டியன்..வைரல் பதிவு இதோ
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் சமூகத்தில் பிரபல நட்சத்திரங்களாக உருவெடுப்பது நிகழ்ச்சிக்கு கிடைத்த சிறப்பாகும். பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பானது. இதற்கு முதலில் கமலும் பின்னர் சிம்புவும் தொகுப்பாளராக பணியாற்றி வந்தனர். முன்னதாக நடைபெற்ற சீசனில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அல்டிமேட் சீசனில் இடம் பெற்றனர். இந்த நிகழ்ச்சி போதுமான வரவேற்பை பெறவில்லை. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனுக்கான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இதில் இடம்பெறுபவர்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வருகிறது. விஜய் டிவி பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...குட்டை குட்டை உடை அணிந்து இதயத்தை கிள்ளும் அதுல்யா ரவி... க்யூட் போட்டோஸ் இதோ
இந்நிலைகள் பிக்பாஸ் 6 இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமலஹாசன் காட்டில் உள்ள மிருகங்களின் குணாதிசயங்கள் குறித்து பேசும் காணொளி இடம் பெற்றுள்ளது. முந்தைய சீசன்களில் அழகிய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நிகழ்ச்சி குறித்து விளம்பரம் செய்து வந்த கமல், விக்ரமுக்கு பிறகு வேற லெவலில் கலக்கி வருகிறார். ஆரம்பமே அமர்க்களம் தான். முதல் பிரமோவில் வேட்டையை ஆரம்பிக்கலாமா என துவங்கிய கமல் தற்போது மிருகங்களுடன் தெறிக்கும் டயலாக் பேசி உள்ள ப்ரோமோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...வண்ண வண்ண கவர்ச்சி உடைகளில் மனதை மயக்கும் பாக்கியலட்சுமி ராதிகா