தற்போது மிகவும் குட்டையான உடை அணிந்து இவர் கொடுத்துள்ள போட்டோக்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறுவதோடு விரைவில் நல்ல படங்களில் நடிக்க இவருக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
தமிழில் முன்னணி நாயகி ஆகும் ரேசில் இருப்பவர் அதுல்யா ரவி. முன்னதாக இவர் பால்வாடி காதல் எனும் குறும்படத்தில் தோன்றியிருந்தார். இந்த குறும்படத்தை பார்த்த இயக்குனர் சிவராஜ் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். அதன்படி இவர் இயக்கத்தில் வெளியான காதல் கண்கட்டுதே என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார் அதுல்யா ரவி. இந்த படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பு பெற்றிருந்தது. பின்னர் துறையின் ஏமாளி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நவீன கால சுதந்திரப் பெண்ணாக இவர் தோன்றி நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...வண்ண வண்ண கவர்ச்சி உடைகளில் மனதை மயக்கும் பாக்கியலட்சுமி ராதிகா
தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கம் என்னும் படத்தில் தோன்றியிருந்த இவர் நாயகன் ஆரியின் ஊமை சகோதரியாக நடித்து பாராட்டுகளை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து 2019 -ல் சுட்டுப் பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் தோன்றியிருந்தார். 2021 ஆம் ஆண்டு சாந்தனு பாக்யராஜின் முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம் எண்ணித்துணிக, சடலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அதுல்யா ரவி தற்போது ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்து வரும் டீசல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் டீசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்புகளை பெற்றிருந்தது.
மேலும் செய்திகளுக்கு...என் கணவரை உருவக்கேலி செய்யதீர்கள்...வேண்டுகோள் விடுக்கும் விஜே மஹாலட்சுமி
துணை வேடங்களில் தோன்றிவரும் அதுல்ய ரவி முன்னணி நடிகையாகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக பல போட்டோ சூட்டுகளையும் நடத்தி வரும் இவர் அது குறித்தான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மிகவும் குட்டையான உடை அணிந்து இவர் கொடுத்துள்ள போட்டோக்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறுவதோடு விரைவில் நல்ல படங்களில் நடிக்க இவருக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...அதற்குள் ஓடிடி - க்கு போன கார்த்தியின் விருமன் ...எப்ப ரிலீஸ் தெரியுமா?