துப்பாக்கியும் கையுமாக ரம்யா பாண்டியன் துப்பாக்கி சூடும் பயிற்சி பெறும் புகைப்படம் தான் அது.
பிரபல நடிகர் அருண்பாண்டியனின் உறவினரான ரம்யா பாண்டியன், திரை உலகில் ஜொலிக்க பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக மானே தேனே பொன்மானே என்ற குறும்படம் மூலம் மணிரத்தினத்தின் உதவி இயக்குனரான ஷெல்லியுடன் பணி புரியும் வாய்ப்புகளைப் பெற்ற இவர் பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் டம்மி டப்பாசு படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். இதை தொடர்ந்து ரா ரா ராஜசேகர் பட குழுவினரின் மூலம் கிடைத்த அறிமுகத்தின் ராஜு முருகனின் ஜோக்கர் படத்தில் இணைந்தார் ரம்யா பாண்டியன். இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வந்து நல்ல பாராட்டுகளை பெற்றிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...குட்டை குட்டை உடை அணிந்து இதயத்தை கிள்ளும் அதுல்யா ரவி... க்யூட் போட்டோஸ் இதோ
ஜோக்கர்படத்தை பார்த்த சமுத்திரக்கனி ஐடி நிறுவனத்தின் பணி புரியும் அம்மாவாக ஆண் தேவதை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க அந்த ரோல் மூலம் நல்ல பாராட்டுக்களை பெற்றார் ரம்யா பாண்டியன். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்கிற படத்தில் இவருக்கு பல விருதுகள் கிடைக்க தற்போது இடும்பன்காரி, நண்பகல் நேரத்து மயக்கம் என இரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ரம்யா பாண்டியன். இதற்கிடையே பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். இது இவருக்கு பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்று கொடுத்தது. அதன்படி நான்காவது சீதனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் இறுதிப் போட்டியாளராக வந்து இரண்டாவது ரன்னர் அப் வெற்றியை பெற்றார்.
மேலும் செய்திகளுக்கு...வண்ண வண்ண கவர்ச்சி உடைகளில் மனதை மயக்கும் பாக்கியலட்சுமி ராதிகா
இதைத்தொடர்ந்து அக்டோபர் 20220 இல் zee5 -ல் வெளியான முகிலன் வெப்தொடர் மூலம் இணையதளத்திலும் என்ட்ரி கொடுத்துவிட்டார். இதற்கு இடையே சமீபத்தில் டான் படத்தில் இருந்து பேமஸான டயலாக்கை நடிகர் சூரியுடன் பேசி நடித்திருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மேலும் ஆச்சர்யத்தை கூட்டி உள்ளது. அதாவது துப்பாக்கியும் கையுமாக இவர் துப்பாக்கி சூடும் பயிற்சி பெறும் புகைப்படம் தான் அது. இது குறித்தான பதிவில் ,"தேசிய துப்பாக்கி சுடும் வீரரான ராஜசேகர் பாண்டியனுக்குநன்றி எனக்கு கற்பித்ததற்கும், என்னை ஊக்குவித்ததற்கும். என் முதல் முறை, அதுவும் அன்டோலியோ ஜோலி துப்பாக்கியுடன். உலகின் ஒரே நூறு துப்பாக்கிகளில் ஒன்று. இது ஒரு அற்புதமான அனுபவம்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...என் கணவரை உருவக்கேலி செய்யதீர்கள்...வேண்டுகோள் விடுக்கும் விஜே மஹாலட்சுமி