தவறாக நடந்துகொண்ட தீவிரவாதியை கொன்றதால்...பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும் கண்ணம்மா!

By Kanmani P  |  First Published Sep 16, 2022, 5:07 PM IST

கண்ணம்மா தான் கொலை செய்ததாக கூறுகிறார். இதனை அடுத்து கண்ணம்மாவை சுட்டுக் கொள்ள முடிவு செய்கிறது தீவிரவாத கும்பல்.


முன்பெல்லாம் டிஆர்பி - ல் முன்னணியில் இருந்த பாரதி கண்ணம்மா சமீப காலமான தனது பான்ஸ் பேஸை இழந்து விட்டது. இதனால் மீண்டும் அதே அளவு டிஆர்பியை  பெறுவதற்காக பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய திருப்பங்கள் கொண்டுவரப்படுகிறது. அதன்படி பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் வேலை செய்யும் மருத்துவமனையை தீவிரவாதிகள் ஹைஜெக் செய்கின்றனர். அதில் ஒரு தீவிரவாதி மிகவும் மோசமானவனாக இருக்கிறான். அவன் அங்குள்ள பெண்களை தவறாக நடத்துகிறார். அதை அறிந்து கொண்ட கண்ணம்மா அவன் மீது பெருத்த கோபம் அடைகிறார்.  அந்த தீவிரவாதி அஞ்சலியையும் தனியாக அழைக்கிறான். ஆனால் அஞ்சலியை விடாமல் கண்ணம்மா செல்கிறார்.

கண்ணம்மாவிடமும் அந்த தீவிரவாதி முறைகேடாக நடக்க முயலும் போது கையில் வைத்திருந்த ஆயுதம் மூலம் அந்த தீவிரவாதியை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு ரத்த கலரியுடன் நிற்கிறார் கண்ணம்மா. அப்போது அங்கு வரும் மற்றொரு தீவிரவாதி செல்வத்தின் ஹிஸ்டரியை எடுத்துவிடும் கண்ணம்மா அவனுக்கு பல அட்வைஸ் கொடுக்கிறார். இருந்தும் எதையும் ஏற்க மறுத்த அந்த தீவிரவாதி செல்வம் தனது தலைவனிடம் சென்று நமது சகாக்களில் ஒருவனை கொலை செய்து விட்டார்கள் ஆனால் கொலை செய்தது யார் என்று தெரியவில்லை என தெரிவிக்கிறான்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...மீண்டும் செந்தில்- கோவை சரளா கிக் கம்போ..வெளியானது புதிய பட அப்டேட்

இதனால் கடுப்பான தீவிரவாத தலைவன் துப்பாக்கியால் தரையில் சுடுகிறான். இந்த சத்தத்தை கேட்ட கண்ணம்மாவின் குடும்பம் உட்பட காவல்துறையினர் அனைவரும் பயத்தில் உறைந்து போகின்றனர். பின்னர் தீவிரவாத தலைவன் டாக்டர் ஒருவரின் நெத்தியில் துப்பாக்கியை வைத்து கொலை செய்தது யார் என  கூறுமாறு மிரட்டுகிறான். அந்த நேரத்தில் கண்ணம்மா தான் கொலை செய்ததாக கூறுகிறார். இதனை அடுத்து கண்ணம்மாவை சுட்டுக் கொள்ள முடிவு செய்கிறது தீவிரவாத கும்பல். அப்போது தன்னை சுடுவதற்கு முன்னர் ஏன் கொலை செய்தேன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என கண்ணம்மா கூறுகிறார். அஞ்சலியும் அவரது குழந்தைகளும் கண்ணாவை விட்டுவிடுமாறு தீவிரவாதியை கெஞ்சுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...பாக்கியாவை பார்த்து சந்தேகிக்கும் ராதிகாவின் அண்ணன..கணவரின் திருமணம் என தெரியாமல் சாதிக்க துடிக்கும் பாக்கியா

மற்றொரு புறத்தில் வெண்பாவின் வீட்டின் முன் வரும் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் புதுவரவு வரப்போவதாக கூறுகிறார். இதனால் ரோகித்தும் வெண்பாவின் தாயும் மகிழ்ச்சி அடைய வெண்பாவோ அதிர்ச்சியில் உறைந்து போகிறார். ஏனென்றால் முந்தைய எபிசோடுகளில் வெண்பா, தான் கர்ப்பமாக இருப்பது போல கனவு கண்டது தான் அதற்கு காரணம். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

click me!