கிக் படத்தில் கோவை சரளா ஃபயர் புஷ்பாவாகவும் செந்தில் கேசியோவாகவும் நடிக்க உள்ளனர்.
நகைச்சுவை நடிகர்கள் ஏராளம் ஆனால் காமெடி ரோலில் நடிக்கும் நடிகைக ள் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளனர். அந்தவகையில் பழம்பெரும் நடிகை மனோரமாவை தொடர்ந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை என்றால் அவர் கோவை சரளா தான். அதேபோல கவுண்டமணி செந்தில் காம்போவை அடித்துக் கொள்ள இதுவரை ஆள் கிடையாது. இவர்கள் காம்போவிற்கு அடுத்ததாக பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது செந்தில் கோவை சரளா காமெடி தான். கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர்களது ஜோடி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இதைத்தொடர்ந்து கோவை சரளா வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் ஜோடி போட்டு கலக்கி உள்ளார். கோவை சரளா நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மெருகேற்றுவதே அவரது குரலும் கொங்கு தமிழும் தான். நகைச்சுவை நடிகர்களுக்கு ஏற்றார் போல தனது பாணியை படத்திற்கு படம் மாற்றி ரசிகர்களை எவ்வாறு எல்லாம் நகைச்சுவையால் மகிழ்விக்கலாம் என்னும் வித்ததை தெரிந்தவர் கோவை சரளா.
மேலும் செய்திகளுக்கு...பாக்கியாவை பார்த்து சந்தேகிக்கும் ராதிகாவின் அண்ணன..கணவரின் திருமணம் என தெரியாமல் சாதிக்க துடிக்கும் பாக்கியா
Introducing the most versatile actress in a new role - Kovai Sarala as Fire Pushpa in 🤞 after the lead role in , she's back in a prominent role! pic.twitter.com/qz0Vp9qBdf
— Fortune films (@Fortune_films)விவேக்குடன் இவர் கலக்கி இருந்த சினேகிதனே காமெடி இன்றுவரை மீம்ஸாக உலா வந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்நிலையில் மீண்டும் செந்தில் - கோவை சரளா காம்போ திரும்புவது குறித்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதாவது சந்தானம் தற்போது நாயகனாக நடித்து வரும் கிக் படத்தில் தான் இந்த காம்போ மீண்டும் அமைகிறது. இந்த படத்தில் கோவை சரளா ஃபயர் புஷ்பாவாகவும் செந்தில் கேசியோவாகவும் நடிக்க உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு....கொஞ்சம் கூட குறையாத அதே க்யூட்னஸ்...சேலையில் மனதை மயக்கும் ஜெனிலியா..
The comedy legend of Tamil cinema - sharing screen space with for the very first time. See him as CASIO in 🤞 pic.twitter.com/reK0HKy4le
— Fortune films (@Fortune_films)கன்னடத்தில் ஜும் என்ற பெயரில் வெற்றி படமாக அமைந்த இந்த படத்தை அதன் இயக்குனர் பிரசாந்த் ராஜ் தமிழில் ரீமேக் செய்கிறார். இதில் இரு நாயகிகளுடன் சந்தானம் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லோக் சமீபத்தில் தான் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது செந்தில் மற்றும் கோவை சரளா ரோல்கள் குறித்தான போஸ்டர்களை பட குழு அடுத்தடுத்து வெளியிட்டு வரவேற்பைபெற்று வருகிறது. முன்னதாக சந்தானம் குலு குலு படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி போதுமான வரவேற்பை பெறாமல் போனது.
மேலும் செய்திகளுக்கு...கிளாமர் ஹீரோயின்களை பார்த்து பொறாமயைாக இருக்கும்..மீனாவின் கலகலப்பான பேட்டி
On the occasion of Ganesha Chathurthi ✨ Our has been titled as 💥 Here's the first look poster. pic.twitter.com/8HHZzhilEP
— Fortune films (@Fortune_films)