
விஜய் டிவிகள் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது பல திருப்பங்கள் நிறைந்ததாக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் துரோகம் செய்துவிட்டார் என்று தெரிந்தவுடன் தனது கணவர் கோபியை விவாகரத்து செய்யும் பாக்கியலட்சுமி தன் குடும்பம் முழுவதையும் தானே கவனித்துக் கொள்வதாக சூளுரைத்தார். இதனால் கடுப்பான கோபி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இந்த சூழலில் தனது முன்னாள் காதலியை கட்டாயம் கரம்படித்தே ஆக வேண்டும் எனும் சூழ்ச்சியில் இறங்கும் கோபி தனது மகள் மற்றும் ராதிகாவை மூளைச்சலவை செய்து வருகிறார். ராதிகா ஒரு வழியாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து, தடபுடலாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் ராதிகாவின் தாய் மற்றும் சகோதரர். அந்த வகையில் பாக்கியலட்சுமி கேட்டரிங் ஆர்டர் எடுத்துள்ள மினி ஹாலில் என தெரியாமல் அங்கேயே திருமணத்தை நடத்த முடிவு செய்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு....கொஞ்சம் கூட குறையாத அதே க்யூட்னஸ்...சேலையில் மனதை மயக்கும் ஜெனிலியா..
அதற்காக ராதிகாவின் அண்ணன் அந்த மினி ஹால் மேனேஜரை சந்திக்கிறார். அப்போது திருமணத்தில் சமைக்கப் போவது இவர்கள்தான் என பாக்கியா மற்றும் ஜெனியை காட்டுகின்றனர். ஆனால் ராதிகாவின் அண்ணனுக்கு இவர் தான் கோபியின் மனைவி என்பது தெரியாது.பாக்கியலட்சுமி பார்த்தவுடன் இவர் திருமணத்திற்கு முறையாக சமைப்பாரா என்கிற சந்தேகம் ராதிகாவின் அண்ணனுக்கு எழுகிறது. இதை அ அடுத்து பாக்கியலட்சுமியிடம் தனது தங்கையின் திருமணம் குறித்து பலவாறாக விவரிக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...கிளாமர் ஹீரோயின்களை பார்த்து பொறாமயைாக இருக்கும்..மீனாவின் கலகலப்பான பேட்டி
அதன் பிறகு பாக்கியலட்சுமி கட்டாயம் நீங்கள் நினைத்தது போல சமைத்துக் கொடுப்போம் என உறுதி அளிக்கிறார். தனது கணவரின் திருமணம் என்று கூட தெரியாமல் தனது முதல் ஆர்டரை எடுத்துள்ள பாக்கியலட்சுமி இதன் பிறகு இந்த பணியை தொடர்வாரா இல்லையா என்பதை வரும் எபிசோடுகளை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.