விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யாவின் அசரவைக்கும் திறமை! தாறுமாறாய் சிலம்பம் சுற்றி வாயடைத்து போக வைத்த வீடியோ!

Published : Aug 04, 2020, 06:32 PM IST
விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யாவின் அசரவைக்கும் திறமை! தாறுமாறாய் சிலம்பம் சுற்றி வாயடைத்து போக வைத்த வீடியோ!

சுருக்கம்

விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா, நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை, வெயிட் லிப்டிங், நடிப்பு என மற்ற துறையிலும் கவனம் செலுத்தி கலக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது ஊரடங்கு ஓய்வு காரணமாக கிடைத்த நாட்களில் சிலம்பம் சுத்த கற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து மழையை குவித்து வருகிறார்கள்.  

விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா, நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை, வெயிட் லிப்டிங், நடிப்பு என மற்ற துறையிலும் கவனம் செலுத்தி கலக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது ஊரடங்கு ஓய்வு காரணமாக கிடைத்த நாட்களில் சிலம்பம் சுத்த கற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து மழையை குவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: ஆண்ட்டி வயதிலும் உச்ச கவர்ச்சியில் அதகளம் பண்ணும் பிக்பாஸ் ரேஷ்மா..! கொஞ்சம் ஓவராகவே ரசிக்கும் இளசுகள்!
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஸ்டைலிஷ் இங்கிலீஷ் பேசும் தொகுப்பாளராகவும், குணச்சித்திர நடிகையாகவும் அனைவராலும் அறியப்பட்டவர் வி.ஜே ரம்யா. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓகே கண்மணி', 'கேம் ஓவர்', 'வனமகன்', 'ஆடை ' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் தளபதி விஜய்யை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள, 'மாஸ்டர்' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.அடுத்த மாதம் வெளியாக இருந்த இந்த திரைப்படம், 144 தடை காரணமாக மற்றொரு ரிலீஸ் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: பிரமிக்க வைக்கும் லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருளின் புதிய வீடு..! சும்மா கண்ணாடி போல் பளபளக்கும் பங்களா!
 

ஊரடங்கு உத்தரவு காரணமா, வீட்டிலேயே இருக்கும் ரம்யா, கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற நினைத்து, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு கலைகளில் ஒன்றான சிலம்பம் பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார்.

தற்போது பயிற்சியில் ஓரளவு கை தேர்ந்துவிட்ட ரம்யா, மொட்டை மாடியில் சரமாரியாக, சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படி பல கலைகள் கற்று வருவதால், ரம்யா விரைவில் ஏதேனும் ஒரு படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள ரம்யாவின் வீடியோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு