பிச்சைக்காரரை தொழிலதிபராக மாற்றிய கொரோனா...! ஒரு லட்சம் தர ஆசைப்படுவதாக கூறி நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்!

By manimegalai aFirst Published Aug 4, 2020, 4:30 PM IST
Highlights

பிச்சை எடுத்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்த இளைஞர் ஒருவர், இந்த கொரோனா நேரத்தில் டீ விற்பனை செய்யும் தொழிலதிபராக மாறியது மட்டும் இன்றி, பலருக்கு உணவளித்து வருகிறார். இவரின் உயரிய உள்ளதை கண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த இளைஞருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்து நெகிழவைத்துள்ளார்.
 

பிச்சை எடுத்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்த இளைஞர் ஒருவர், இந்த கொரோனா நேரத்தில் டீ விற்பனை செய்யும் தொழிலதிபராக மாறியது மட்டும் இன்றி, பலருக்கு உணவளித்து வருகிறார். இவரின் உயரிய உள்ளதை கண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த இளைஞருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்து நெகிழவைத்துள்ளார்.

இந்த இளைஞர் பற்றி, பிரபல செய்தி தொலைக்காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதில் அந்த இளைஞர், முதலில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்ததாகவும். இதன் மூலம் 100 முதல் 150 வரை தனக்கு கிடைக்கும், அதில் 50 முதல் 60 ரூபாய் வரை சாப்பிட செலவு செய்தாலும் மீதி பணம் மிச்சமாகும். அதனை சேமித்து வைத்திருந்தேன்.

அதன் பின்னர் கடந்த 7 மாதங்களுக்கு முன் அலங்காநல்லூர் வந்து பிச்சை எடுத்து வந்தேன். அப்போது தான் கொரோனா ஊரடங்கு என்று அறிவித்தார்கள். எனவே கையில் தான் சேமித்து வைத்திருந்த, 7000 ரூபாயை வைத்து 5000 ரூபாய்க்கு ஒரு வாடகை வீடும், 2000 ரூபாய்க்கு டீ போடுவதற்கான சாமான்களும் வாங்கினேன். 

டீ பாத்திரம், சைசில் போன்றவை வாடகைக்கு எடுத்து டீ விற்க துவங்கியுள்ளார். ஒரு டீ 10 ரூபாய்க்கு விற்க துவங்கிய இவருடைய தொழில் நன்கு சூடு பிடிக்க துவங்கி விட்டது. தனக்கு கிடைக்கும் லாபத்தில், தினமும் காலை, மாலை, இரவு என மூன்று வேலையும்.

 

பிச்சை எடுத்து தினமும் செலவு செய்தது போக ரூ.7 ஆயிரம் மிச்சப்படுத்தி வைத்திருந்ததை அடுத்து, அந்த பணத்தில் ரூ.5000க்கு வாடகைக்கு வீடும் 2000 ரூபாய் தொழில் செய்யவும் செலவு செய்தார். தற்போது அவர் தினமும் காலை மாலை என மூன்று வேளையும் டீ விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஒரு டீ பத்து ரூபாய் என விற்பனை செய்வதால் ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது கூட பெரிய விஷயம் இல்லை, இந்த டீ விற்கும் பணத்தில், முதலுக்கு மட்டும் பணத்தை எடுத்து வைத்து கொண்டு, மீதம் உள்ள பணத்தில், அரிசி பருப்பு போன்றவை வீட்டிலேயே வாங்கி, தான் பிச்சை எடுத்த போது, பசி பட்டினியோடு எப்படி கஷ்டப்பட்டேனோ அதே போல் யாரும் கஷ்டப்பட கூடாது என, காலை, மாலை, இரவு, என மூன்று வேலையும் 10 பேருக்காவது உணவு சமைத்து வழங்கி வருகிறார்.

மேலும், அனாதையாக ரோட்டில் உள்ள முதியவர்களுக்கு, ஒரு முதியோர் இல்லம் ஒன்றை நிறுவி, ஆதரவற்றவர்களை பார்த்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கான நம்பிக்கை தனக்கு இருக்கிறது என இறக்கத்தான் பிறந்தோம், அது வரை இரக்கத்தோடு இருப்போம் என தத்துவதோடு இந்த உரையை முடித்துள்ளார்.

இந்த இளைஞர் பேச்சை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ், இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்" என நெகிழவைத்துள்ளார்.

இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்”❤️ pic.twitter.com/FSwfc93rKZ

— Raghava Lawrence (@offl_Lawrence)

click me!