''சூடு தாங்க முடியல'' அட்லீயிடம் படபிடிப்பு இடத்தை மாற்ற சொன்ன விஜய்!!!

 
Published : Apr 27, 2017, 01:18 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
''சூடு தாங்க முடியல'' அட்லீயிடம் படபிடிப்பு இடத்தை மாற்ற சொன்ன விஜய்!!!

சுருக்கம்

Vijay told to change the location of the film because of too heat

தெறி படத்தையடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு  சென்னை மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. மேலும் பலகாட்சிகள் சென்னையில் படமாக்கி வருகின்றனர். இன்னும் சில நாட்கள் படபிடிப்பு நடத்தவுள்ளனர். 

இந்த படத்தின் முதல் பார்வை வரும் ஜூன் மாதம் மற்றும் படம் வரும் தீபாவளி அதாவது அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் கூறினார்கள். இதனால் இந்த படத்தின் படபிடிப்பை மேலும் வேகமாக நடத்த பட குழுவினர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

ஆனால் தற்போது  சென்னையில் படப்பிடிப்பு பிற்பகலில் நடத்துவதால்  வெயிலின் தாக்கம் விஜயை ரொம்பவே தாக்கியுள்ளதாம், வெயிலின் சூடு தாங்க முடியாமல் அவதிப்படும் விஜய் மற்றும் நித்யா மேனன் படப்பிடிப்பு தளத்தை வேறு இடத்திற்கு மாற்ற இயக்குனர் அட்லீயிடம் சொன்னார்களாம், விஜய், நித்யாமேனன் கோரிக்கையை ஏற்று வேறு இடத்தை தேடி வருகிறாராம் அட்லீ. 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய படப்பிடிப்பில் வடிவேலு, விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

’விஜய் 61’ படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சின்ன மருமகள் சீரியல் நடிகை திடீரென மாற்றம்... அதிரடியாக களமிறங்கிய புது நடிகை யார்?
சேலையில் செம ஃபைட்டுக்கு ரெடியான சமந்தா... கம்பேக் படத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்