பிரபல இந்தி நடிகரும், அரசியல் வாதியுமான 'நடிகர் வினோத்' புற்று நோய்க்காரணமாக இன்று மும்பையில் மரணமடைந்தார்.
அக்டோபர் 6ம் தேதி 1948ம் ஆண்டு பிறந்த இவர் 1968ம் ஆண்டு திரை உலகில் மன் கா ப்ரீத் என்ற படத்தில் வில்லனாக நடிப்பை தொடர்ந்தார்.
இந்தியில், 100 க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ள இவர், நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
1997 ம் ஆண்டு பிஜேபி யில் இணைந்த்துடன் பஞ்சாப் குர்தாஸ்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் பண்பாட்டு சுற்றுல்லா துறை மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இவருக்கு முன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் 'வினோத் கண்ணா' இன்று காலை மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் மரணமடைந்தார். இவரது உடலுக்கு இந்தி திரைப்பட துறையினர் இரங்கல் தெரிவித்து வருவதுடன்.
'வினோத் கண்ணா' குடுபத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.