
கடந்த பல நூற்றாண்டுகளில், இந்த 2017_ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் மிக பிரசித்தியானது! காரணம்?...பாகுபலி 2 இந்த மாதத்தில் ரிலீஸாவதால். கேட்பதற்கு ஓவர் பில்ட் அப்_ஆகதான் தெரியும். ஆனால் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த ஜால வர்ணனை மிக சாதாரணமானதுதான்.
பாகுபலி என்பது வெறும் சினிமா அல்ல! இது ஒரு டிரெண்ட். ஒரு தென்னிந்திய சினிமாவால் சர்வதேச அளவில் வைபரேஷனை கிளப்ப முடியுமென்கிற ட்ரெண்டை உருவாக்கியது பாகுபலிதான். இதை சாதித்துக் காட்டியது பாகுபலி 1. உலகின் பல மூலைகளை சேர்ந்த, சினிமாவை கிஞ்சிற்றும் விரும்பாத, நம்பாத நபர்களை கூட ஆங்கில சப்டைட்டில் வழியே ‘ஆஸம் மேக்கிங்’ என்று அசரவைத்தது பாகுபலிதான். அமெரிக்க பாக்ஸ் ஆபீஸை தரையிறங்கி பாகுபலி தகர அடி அடித்தபோது, ஒபாமாவுக்கு வைக்கப்பட்ட உள்நாட்டு உளவு நோட்களில் இந்த படத்தை பற்றிய ரெஃபரென்ஸ் வார்த்தைகளும் இருந்தனவாம். இதை அமெரிக்க பத்திரிக்கைகளே அப்போது கோடிட்டு காட்டின.
ஒரு சினிமா என்பதை தாண்டி பாகுபலியை நாம் கொண்டாட வேண்டும். காரணம்?...பாகுபலி நம் மண்ணின் கதை. சர்வதேச தரத்தில் ஒரு படம் சக்கைபோடு போட வேண்டுமென்றால் அது ஏலியன்ஸ்களை பற்றியோ, பூமியை தாக்கும் நானூறு பற்களை கொண்ட டைனோஸர்களை பற்றியோ அல்லது ஐ.எஸ். பயங்கரவாதம் பற்றியோ இருக்க வேண்டுமென்பதில்லை! பதவிக்காக நடக்கும் சாதாரன பங்காளி சண்டையை கூட நாங்கள் ஸ்பீல்பெர்க்கை விட நூறு படங்கு த்ரில்லிங்காக படைப்போம் என்று ஹாலிவுட் ஜாம்பவான்களின் தலையில் நறுக்கென்று குட்டு வைத்தவர் நம் ராஜமெளலி.
உறவுகளுக்கு இடையில் ரத்தமும் சதையுமாய் பின்னிக் கிடக்கின்ற உணர்வுகளான காதல், துரோகம், வன்மம் ஆதரவற்ற நிலை, கருணை, காமம், பதவியை நோக்கிய வெறி, பழிக்குப் பழி, தர்மத்தின் வாழ்வை சூது கவ்வி பின் இறுதியில் தர்மம் வெல்லும் நம்பிக்கை ஆகியன வேறெந்த தேசத்தை காட்டிலும் நம் தேசத்தவர்களிடம்தான் அதிகம் விரவிக்கிடக்கிறது. இந்த உணர்வுகளின் கூட்டாஞ்சோறுதான் பாகுபலி. இது உன் கதை, என் கதை, நம் கதை!
பாகுபலியின் கதாபாத்திரங்கள் நம்மோடும், நம் முன்னேயும், பின்னேயும், வாழ்க்கை நெடுகிலும் சந்திக்க கூடியவர்கள்தான். நரித்தனமே நிறைந்த பிங்கல தேவனாக சில மாமன்களை கண்டிருக்கிறோம், கருணையும்_தைரியமும் தெறிக்கும் பெண்மணியாக சில சிவகாமி அத்தைகளை கண்டிருக்கிறோம், பல்வாள்தேவன் எனும் பயங்கர பங்காளி சகோதரன் நம் வாழ்விலும் உண்டு, போர்க்களத்தின் நடுவே ஒரு கூடை பூவாக சில அவந்திகாக்களும் நம் வாழ்வில் உண்டு, இந்த அகண்ட பாரதம்தான் மகிழ்மதி! வீரமும் தீரமும் இருந்தும் வாய்ப்பின்றி சபிக்கப்பட்ட நாயகன் பாகுபலியாக நீயும், நானும் இருக்கிறோம்.
ஆக காட்சி வடிவில் சர்வதேச கலாரசிகர்களையும் மிரள வைக்கும் பாகுபலி கொண்டாடப்பட வேண்டியவன்தானே!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.