
இந்திய போர் விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரை பாகிஸ்தான் ராணுவம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என பலர் கடவுளுக்கு பிராத்தனை செய்தனர்.
அவர்களுடைய பிராத்தனை மற்றும் இந்திய பற்று கொண்டவர்கள் நம்பிக்கையும் அபிநந்தனை பத்திரமாக மீண்டும் இந்தியா அழைத்து வந்து அவருடைய குடும்பத்திடம் சேர்த்து.
இதனை தொடர்ந்து தற்போது, தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தமிழ் செல்வன் என்பவருடன், நடிகர் விஜய் போன் மூலம் நலம் விசாரித்த ஆடியோ ஒன்று, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த ஆடியோவில் விஜய், தமிழ் செல்வனுக்கு போன் செய்து, ஜம்முவிற்கு சென்று விட்டர்கள் என கேள்விப்பட்டேன் என கூற, அதற்கு அந்த ராணுவ வீரரும் 'இப்போது காஷ்மீர் மேலே செல்ல தயாராகி கொண்டிருப்பதாக கூறுகிறார்'.
பின் பத்திரமாக செல்லுங்கள், எல்லாம் நல்லது தான் நடக்கும் என்று விஜய் கூறுகிறார். ஆனால் விஜய் எப்போது பேசிய ஆடியோ இது என தெரியவில்லை. இப்போது வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் வீடியோவாக மாறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.