பாலிவுட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட கீர்த்தி சுரேஷ் ..! பிரபல நடிகையின் கணவர் தான் தயாரிப்பாளர்!

Published : Mar 02, 2019, 12:46 PM IST
பாலிவுட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட கீர்த்தி சுரேஷ் ..! பிரபல நடிகையின் கணவர் தான் தயாரிப்பாளர்!

சுருக்கம்

குழந்தை நட்சத்திரமாக சில மலையாள படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். 

பாலிவுட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட கீர்த்தி சுரேஷ் – பிரபல நடிகையின் கணவர் தான் தயாரிப்பாளர்!

குழந்தை நட்சத்திரமாக சில மலையாள படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். பின், 2015-ஆம் ஆண்டு ரிலீஸான ‘இது என்ன மாயம்’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து தமிழிலும் கால் பதித்தார்.

இதனைத் தொடர்ந்து ‘விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால்’ போன்ற பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளம் மற்றும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் மோகன் லாலின் ‘மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், புதிய ஹிந்தி படமொன்றில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தை ‘பதாய் ஹோ’ புகழ் அமித் ஷர்மா இயக்கவுள்ளாராம். இதனை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது ‘Bayview Projects LLP’ நிறுவனம் மூலம் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'என் வகுப்புத் தோழர்', நண்பன் ஸ்ரீனிவாசன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்
கூலி படத்தின் லைஃப் டைம் வசூலை முதல் நாளே வாரிசுருட்டிய அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்