Arabic Kuthu :‘அரபிக் குத்து'க்காக செல்லம்மாவுடன் இணைந்த அனிருத்.... காதலர் தினத்தன்று செம்ம டிரீட் வெயிட்டிங்

By Ganesh Asianet  |  First Published Feb 13, 2022, 11:16 AM IST

பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) என்கிற பாடல் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அனிருத் பாடி உள்ள இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.


லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் வேட்டை மன்னன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் (Nelson). அப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் முடங்கிப்போனது. இதையடுத்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நெல்சன். அவர் நடித்த டாக்டர் (Doctor) படத்தை இயக்கினார். இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் திரையரங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. மேலும் இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையை கிளப்பியது.

Tap to resize

Latest Videos

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் நெல்சன் படத்தை இயக்கி உள்ளார் நெல்சன். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் (Anirudh) இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) என்கிற பாடல் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அனிருத் பாடி உள்ள இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இப்பாடலின் புரோமோ வீடியோ வைரல் ஆனது.

இந்நிலையில், இப்பாடலை அனிருத் உடன் இணைந்து பாடகி ஜோனிடா காந்தியும் (Jonita Gandhi) பாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான ‘செல்லம்மா’ பாடல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனால் இப்படத்தின் மூலம் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. 

click me!