"இது அட்ராக்ஷனான டைட்டில்...! இது, கனெக்ட்டாகும் டைட்டில்...!" - ரசிகர்கள் கொண்டாடும் விஜய்சேதுபதியின் புதிய படத்தலைப்பு இதுதான்!

Published : Nov 01, 2019, 12:00 PM IST
"இது அட்ராக்ஷனான டைட்டில்...! இது, கனெக்ட்டாகும் டைட்டில்...!" - ரசிகர்கள் கொண்டாடும் விஜய்சேதுபதியின் புதிய படத்தலைப்பு இதுதான்!

சுருக்கம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என எந்த மொழியாக இருந்தாலும், ஹீரோ, வில்லன், சிறப்பு தோற்றும் என எந்தவிதமான கேரக்டராக இருந்தாலும், எந்தவித தயக்கமும் இல்லாமல் நடித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. 

அவரது நடிப்பில், 'சங்கத்தமிழன்' படம் வரும் நவம்பர் 15ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, 'லாபம்', 'க/பெ ரணசிங்கம்', 'கடைசி விவசாயி', 'மாமனிதன்' என அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. 

அதுதவிர, வில்லனாக நடிக்கும் விஜய்யின் 'தளபதி-64' படம், தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்கும் படம் என சுமார் அரை டஜன் படங்களில் பிஸியாக நடித்துவரும் விஜய் சேதுபதி, அடுத்து புதுமுக இயக்குநர் வெங்கடகிருஷ்ணா ரோஹந்த் இயக்கும் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார். 

சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கும் இந்தப்படம், விஜய்சேதுபதியின் 33-வது படமாகும். இதில், அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். 

இந்தப் படத்திற்கான டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என படத்திற்கு கேட்சிங்கான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த டைட்டில்தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடலின் வரியையையே விஜய்சேதுபதியின் படத்திற்கு தலைப்பாக்கியிருப்பது ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

 "எல்லா ஊரும் எம் ஊர்... எல்லா மக்களும் எம்உறவினரே " என்ற அர்த்தத்தை உணர்த்தும் இந்த வரியை அடிப்படையாகக் கொண்டே இந்தப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, "யாதும் ஊரே யாவரும் கேளிர்"  படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!