
அதற்கு காரணம், இதுவரை அஜித்துடன் எந்த இயக்குநரும் தொடர்ந்து 4 படங்களில் பணியாற்றியதில்லை. அஜித் - சிவா கூட்டணியில் உருவான 4 படங்களில் விவேகத்தை தவிர்த்து மற்ற அனைத்துப் படங்களும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர்கள் என அனைவரின் கஜானாவையும் நிரப்பியது எனலாம்.
குறிப்பாக இவ்விருவரின் கூட்டணியில் கடைசியாக வந்த 'விஸ்வாசம்' படம், குடும்பங்கள் தோறும் கொண்டாடவைத்து, வசூலிலும் சாதனை படைத்தது. சுமார் 6 ஆண்டுகளாக இணைந்தே பயணம் செய்த இந்த வெற்றிக்கூட்டணி ஒரு மாற்றத்திற்காக தனித்தனியே பிரிந்தது.
இதனையடுத்து, நடிகர் சூர்யாவுடன் இணைந்த இயக்குநர் சிவா, "சூர்யா-39 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் விறுவிறுப்பாக உருவாகிவரும் அதேவேளையில், சிவாவுக்கு அடித்த ஜாக்பாட்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியி்ன் 168-வது படம். சிவா கூறிய கதை பிடித்திருந்தததால் உடனடியாக ஓ.கே. சொன்ன ரஜினி, தர்பார் படத்தை முடித்துக் கொடுத்தப்பிறகு சிவா இயக்கத்தில் நடிக்க கால்ஷுட் கொடுத்துள்ளார்.
தற்போதைக்கு, 'தலைவர்-168' என டைட்டில் வைக்கப்பட்டிற்கும் இந்தப் படத்தை, கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எந்திரன், பேட்ட படத்தின் மாபெரும் வெற்றிக்குப்பிறகு ரஜினி - சன் பிக்சர்ஸ் இணையும் 3-வது படம் இதுவாகும். படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், ரஜினியுடன் கைகோர்க்கும் ஹிரோயின் யார்?என்ற உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், 'தலைவர் -168' படத்திற்கு இயக்குனர் சிவா, "வியூகம்" என்ற டைட்டிலைதேர்வு செய்துள்ளாராம்.
சிவாவுக்கு 'வி' சென்ட்டிமென்ட் வொர்க்அவுட் ஆகும் என்பதால், அதை பின்பற்றியே 'வி'-யில் தொடங்கும் டைட்டிலை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், ரஜினியின் அரசியல் எண்ட்ரீக்கு ஏற்றாற்போல் 'தலைவர்-168' படத்தின் டைட்டில் உள்ளதால் அதனை ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.