
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் ரஜினி, அதற்கு அடுத்து ஒரே ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அரசியலில் முழு மூச்சாக இறங்க முடிவெடுத்துள்ள நிலையில் அப்படத்தைத் தயாரிக்க சுமார் 4 முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.
தலைவர் 168’என்று பெயரிடப்பட்டுள்ள ரஜினியின் அடுத்த படம் மிக விரைவில் துவங்க உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘விஸ்வாசம்’சிவா இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. இதில் ரஜினியின் ஜோடியாக அசுரன் பட நாயகி மஞ்சு வாரியரும் அவரது மகளாக கீர்த்தி சுரேஷும் நடிக்க உள்ளதாக தகவல்கள் நடமாடுகின்றன.
இந்நிலையில் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி, அவர் அடுத்து இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கப்போகிறாராம். அப்படத்துக்கான இயக்குநரோ, தயாரிப்பாளரோ இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும் ரஜினியின் கடைசிப்படத்தை தயாரித்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் பாலசந்தரின் கவிதாலயா, ஏ.வி.எம்.,எஸ்.தாணுவின் வி ப்ரடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் போட்டியில் உள்ளனராம். இவர்களுடன் தனது வுண்டர்பார் நிறுவனத்துக்கு அப்படத்தைத் தட்டித் தூக்கிவிடவேண்டும் என்ற முடிவில் இயக்குநர் வெற்றிமாறனுடன் தயாராக இருக்கிறாராம் தனுஷ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.