நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிடப்போகும் வியாபாரிகள் சங்கம்...

Published : Nov 01, 2019, 10:21 AM IST
நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிடப்போகும் வியாபாரிகள் சங்கம்...

சுருக்கம்

அந்த சர்ச்சை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், புதியதொரு சர்ச்சையில் மாட்டியுள்ளார். பொதுவாகவே விளம்பரங்களில் நடிக்க விரும்பாத அவர், பொதுமக்களை ஆன்லைனில் மளிகைப் பொருள்களை வாங்க வைக்கும் ‘ஆப்’பான ‘மாண்டி’ (Maandee) யின் விளம்பர மாடலாகி அதன் விளம்பரத்தில் ஆன்லைன் மளிகைப் பொருள்களை வாங்கச் சொல்கிறார்.

எவ்வளவுதான் நல்ல காரியங்கள் செய்தாலும் சிறிய சர்ச்சைகளில் மாட்டினாலே நடிகர்களை வறுத்தெடுப்பதற்கு ஒரு கூட்டம் எப்போதும் காத்துக்கொண்டேயிருக்கிறது. அவ்வகையில் இரண்டாவது முறையாக மாபெரும் சர்ச்சை ஒன்றில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இதையொட்டி இன்னும் மூன்று தினங்களில் அவரது அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக ஒரு அமைப்பு மிரட்டி வருகிறது.

புயல்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பெரிய அளவில் சாதனை படைக்கும் ஏழைகளுக்கு எப்போதுமே ஓடோடி உதவி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் நடிக்கவிருப்பதாக ஒரு சர்ச்சையில் மாட்டி அப்படத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தார். அந்த சர்ச்சை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், புதியதொரு சர்ச்சையில் மாட்டியுள்ளார். பொதுவாகவே விளம்பரங்களில் நடிக்க விரும்பாத அவர், பொதுமக்களை ஆன்லைனில் மளிகைப் பொருள்களை வாங்க வைக்கும் ‘ஆப்’பான ‘மாண்டி’ (Maandee) யின் விளம்பர மாடலாகி அதன் விளம்பரத்தில் ஆன்லைன் மளிகைப் பொருள்களை வாங்கச் சொல்கிறார்.

சமீப காலமாகவே இதுபோன்ற ஆன்லைன் வணிகத்தால் சிறு குறு வியாபாரிகள் நலிவடைந்து வரும் நிலையில் இப்படி முன்னணி ஹீரோவான இவர் ஆன்லைன் வணிகத்துக்கு ஆதரவு தருவது தவறு என்று அவருக்கு எதிர்ப்பு ஆரம்பித்து வலுத்து வருகிறது.“அவரது படங்களை ஆன்லைனில் பார்த்தால் அவர் பொறுத்துக் கொள்வாரா..?” என்று அவரை எதிர்ப்பவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..!இதற்கிடையில் வரும் 4ம்தேதி திங்கள்கிழமை காலை விஜய் சேதுபதியின் விருகம்பாக்கம் அலுவகத்தை முற்றுகையிட வணிகப் போராளி கொளத்தூர் த.ரவி தலைமையில் வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?