சென்னை தியேட்டரில் காட்சிகள் ரத்தாகின்றனவா?...அதிர்ச்சியில் ‘பிகில்’வட்டாரம்...

Published : Nov 01, 2019, 09:30 AM IST
சென்னை தியேட்டரில் காட்சிகள் ரத்தாகின்றனவா?...அதிர்ச்சியில் ‘பிகில்’வட்டாரம்...

சுருக்கம்

பிகில் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஏழுநாட்கள் ஆகியுள்ள நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான தேவி பாரடைஸில் போதுமான கூட்டம் இல்லாததால் பிகில் திரைப்படத்தின் மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் நேற்றைய மாலைக் காட்சி ஒன்றுக்கு 7 பேர் மட்டுமே வந்திருந்ததாகவும் பின்னர் அவர்கள்  தேவி தியேட்டருக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

விஜய்,அட்லி கூட்டணியின் ‘பிகில்’திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது என்று ஆளாளுக்கு ரீல் விட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அப்படத்திற்கு 7 பேர் மட்டுமே வந்ததால் சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரு காட்சி ரத்து செய்யப்பட்டதாக பரவும் செய்திகள் அப்பட வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிகில் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஏழுநாட்கள் ஆகியுள்ள நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான தேவி பாரடைஸில் போதுமான கூட்டம் இல்லாததால் பிகில் திரைப்படத்தின் மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் நேற்றைய மாலைக் காட்சி ஒன்றுக்கு 7 பேர் மட்டுமே வந்திருந்ததாகவும் பின்னர் அவர்கள்  தேவி தியேட்டருக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதுகுறித்து திரையரங்க நிர்வாகியிடம் கேட்ட போது, தேவி சினிமாஸில் மொத்தம் 4 திரையரங்குகள் உள்ளன. அதில் 2-ல் பிகில் திரையிடப்பட்டுள்ளது. இரண்டு திரையரங்குகளுக்கான கூட்டம் வராததால் ஒன்றில் மட்டும் பிகில் திரையிடப்படுகிறது. இது பிகில் படத்துக்கு மட்டும் அல்ல மற்ற படங்களும் இப்படித் தான் திரையிடப்படுகிறது என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.அச்செய்தியை இதுவரை நடிகர் விஜய் தரப்போ தயாரிப்பாளர் தரப்போ மறுக்காததால் விஜய் படம் 200 கோடி வரை வசூலித்ததாகச் சொல்லப்படும் அத்தனை செய்திகளும் போலியானவை என்றே தெரிகின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ganja Karuppu : விபத்தில் உயிரிழந்த தம்பி... விஜய் அரசுக்கு கண்ணீருடன் கஞ்சா கருப்பு வைத்த கோரிக்கை
Karuppu OTT release : டெலிடட் சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு? எப்போ தெரியுமா?