வாரிசு நடிகரின் படத்திற்காக இணைந்த... விஜய் சேதுபதி மற்றும் கீர்த்தி சுரேஷ்..!

Published : Apr 13, 2021, 08:01 PM IST
வாரிசு நடிகரின் படத்திற்காக இணைந்த... விஜய் சேதுபதி மற்றும் கீர்த்தி சுரேஷ்..!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர்களின் பிள்ளைகள் பலர், தற்போது தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், ஒரு சில ஹிட் படங்களை கொடுத்த, வாரிசு நடிகர் ஒருவருக்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைய உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

அடல்ட் படங்கள் முதல் கிராமத்து கதைக்களம் கொண்ட படங்கள் வரை, பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். இவரது அப்பா நவரச நாயகன் கார்த்திக் 80 மற்றும் 90 களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது பெயரை காப்பாற்றும் அளவிற்கு, கெளதம் கார்த்திக்,  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டாலும், இதுவரை சூப்பர்... டூப்பர்... ஹிட் படத்தை கொடுக்க முடியவில்லை.

கௌதம் கார்த்திக் ஏற்கனவே சிம்புவுடன் ’பத்து தல’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’செல்லப்பிள்ளை’ என வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் அருண் சந்திரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில் ’செல்லப்பிள்ளை’ படத்தின் மோஷன் டீசர் நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை 11.05 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த மோஷன் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி ஆகிய மூவரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட உள்ளனர். இதுகுறித்த தகவல் இவர்கள் மூவரின் போஸ்டருடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?