வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கிய கொரோனா? தளர்வுகள் வேண்டும்... போராட்டத்தில் குதித்த நாட்டுப்புற கலைஞர்கள்!

By manimegalai aFirst Published Apr 13, 2021, 3:03 PM IST
Highlights

நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள், தளர்வுகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 

நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள், தளர்வுகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும், தற்போது கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால், தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி 8 மணிக்கு மேல் வழிபாட்டு தளங்கள் திறந்திருக்க கூடாது, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், ஆட்டோ, போன்றவற்றில் இருவருக்கு மேல் ஏற்றக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

கொரோனாவால் ஒரே நாளில் தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருவதால், முழு ஊரடங்கு போர்டாப்படுமா? என்கிற அச்சமும் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்: விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..! வைரலாகும் கல்யாண பத்திரிக்கை!
 

மேலும் தற்போது கோவில் திருவிழா சீசன் என்பதால், 8 மணிக்கு மேல் திருவிழா நேரங்களில் நடத்தப்படும்,  நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டுப்புற கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த  ஆண்டு திருவிழா காலங்கள்  தொடங்கிய போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனவே பலர் வேலைகள் இழந்து பசி பட்டினியோடு வாடும் நிலை உருவாகியது.

இதை தொடர்ந்து, மீண்டும் திருவிழாக்காலங்களில்  போட்டப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளால், தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக, நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் ஒன்று கூடி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில், தப்பாட்டம்,  ஒயிலாட்டம் , மயிலாட்டம், கரகாட்டம், கூத்து பட்டறை கலைஞர்கள், நாடக கலைஞர்கள், கிராமிய இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்:மளமளவென உடல் எடையை குறைத்து... செம்ம ஸ்லிம் லுக்கில் அடையாளம் தெரியாமல் மாறிய பிக்பாஸ் காஜல் பசுபதி!
 

அனைவரும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி,  கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து கலைநிகழ்ச்சிகளுக்கு தளர்வு அளித்து விதிகளுக்கு உட்பட்டு நாடகம் மற்றுத் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.   சினிமா திரை அரங்குகளுக்கு 50 சதவீத ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு அனுமதி அளித்துள்ளது போல நாடக கலைஞர்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்து தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து கஜா புயல், கொரோனா தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் கலைஞர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வறுமை காரணமாக உயிர் பலி சம்பவம் கூட நடந்துள்ளது, எனவே இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க நாடக, நாட்டிய, இசைக் கலைஞர்களுக்கு கொரோனா தளர்வுகளை தமிழக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.

click me!