'கர்ணன்' படத்தில் இரண்டே நாட்களில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்...! நடிகர் உதயநிதியின் பரபரப்பு தகவல்!

By manimegalai aFirst Published Apr 13, 2021, 5:36 PM IST
Highlights

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் "கொடியன்குளம்" என்கிற கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இதனால் கர்ணன் திரைப்படத்தில் வரும் பொடியன்குளம் எனும் கிராமம் குறித்து ரசிகர்கள் மிக எளிதாக புரிந்து கொண்டனர்.
 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் "கொடியன்குளம்" என்கிற கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இதனால் கர்ணன் திரைப்படத்தில் வரும் பொடியன்குளம் எனும் கிராமம் குறித்து ரசிகர்கள் மிக எளிதாக புரிந்து கொண்டனர்.

இந்நிலையில் "கர்ணன்" திரைப்படத்தில் இடம்பிடித்த கொடியன்குளம் நிகழ்வு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் "கர்ணன்" திரைப்படத்தில் காட்டப்பட்டு இருக்கும் 'பொடியன்குளம்' சம்பவம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், அதாவது கடந்த 1997 ஆம் ஆண்டு நடைபெற்றதாக காத்திருந்தனர்.  இதனால் இயக்குநர் மாரிசெல்வராஜ் செய்தது வரலாற்றுப் பிழை என்பதுபோல யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையான விமர்சனம் செய்து வந்தனர். 

பலர் இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால், வரலாறுகள் மாற்றி அமைக்க கூடாது. உடனடியாக படக்குழு இதனை திருத்தி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதே நேரத்தில் இயக்குநர் மாரிசெல்வராஜ் வரலாற்றைத் தவறாகச் சித்தரிக்க முயற்சிக்கிறாரா? அல்லது ஒருவர் மீது மட்டும் தவறான கற்பிதம் செய்ய முயற்சிக்கிறாரா? என்பதுபோன்ற பல்வேறு தரப்பு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வந்தன. 

இந்நிலையில் இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக, திரைப்படத்தில் வரும், ஆண்டு விரைவில் மாற்றி அமைக்க படும் என படக்குழு உறுதியளித்துள்ளதாக, உதயநிதி ட்விட் செய்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ் ,அண்ணன் தாணு, இயக்குனர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி என தெரிவித்துள்ளார். 

click me!