திரைப்படத்திற்கு முன்பே சன் டிவி சீரியலில் நடித்த விஜய் சேதுபதி! எந்த தொடர் தெரியுமா? வைரல் வீடியோ...

Published : May 21, 2020, 02:22 PM ISTUpdated : May 21, 2020, 02:28 PM IST
திரைப்படத்திற்கு முன்பே சன் டிவி சீரியலில் நடித்த விஜய் சேதுபதி! எந்த தொடர் தெரியுமா? வைரல் வீடியோ...

சுருக்கம்

நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட், திரையுலகில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும், மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். அவர் பல்வேறு திரைப்படங்களில் தற்போது நடித்து வந்தாலும், ஆரம்ப காலங்களில் சீரியலிலும் நடித்துள்ளார். இதுகுறித்த காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  

நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட், திரையுலகில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும், மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். அவர் பல்வேறு திரைப்படங்களில் தற்போது நடித்து வந்தாலும், ஆரம்ப காலங்களில் சீரியலிலும் நடித்துள்ளார். அவர்  தோன்றிய காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: 8 ஆண்டுகளுக்கு பின்... சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் ரீ- என்ட்ரி கொடுக்கும் ஜெனிலியா!
 

நடிகர் விஜய் சேதுபதியை பொறுத்தவரை முன்னணி இடத்தை பிடித்து விட்டதால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என கூறாமல், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் துணிந்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, 'மாஸ்டர்' படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். 

சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் கடவுளாக சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: இல்லத்தரசிகளை குஷி படுத்திய தமிழக அரசு! நிபந்தனைகளுடன் துவங்குகிறது சின்னத்திரை படப்பிடிப்புகள்..!
 

விஜய் சேதுபதி தனது நடிப்பு பயணத்தை...  வெள்ளித்திரையில் சிறு சிறு, வேடங்களில் தான் தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதிகம் அறியப்படாத உண்மை என்னவென்றால், விஜய் சேதுபதி சன் டிவி சீரியலான ‘பெண்’ சீரியலிலும் நடித்துள்ளார்.

தனது தொலைக்காட்சி தொடர் அனுபவத்தைப் பற்றி நடிகர் விஜய் சேதுபதி, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியபோது கூட, “நான் ஒரு சீரியலில் நடித்தேன் என்பது பலருக்குத் தெரியாது. நான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடம் அது தான். முதல் 3 மாதம் மட்டுமே நடித்தேன். பின் சரியாக நடிக்க தெரியாமல் வெளியேறினேன். எனக்குள் இருக்கும் நடிகனை நான் உணர்ந்த இடமும் அது தான் என கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்:கதறி அழும் பெண்! அதிர வைக்கும் பகீர் காட்சிகள்! 'பொன்மகள் வந்தாள்' ட்ரைலருக்கு முன்பே சூர்யா வெளியிட்ட காட்சி!
 

தற்போது பெண் சீரியலில் விஜய் சேதுபதி தோன்றிய காட்சி  சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!