8 ஆண்டுகளுக்கு பின்... சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் ரீ- என்ட்ரி கொடுக்கும் ஜெனிலியா!

Published : May 21, 2020, 01:24 PM IST
8 ஆண்டுகளுக்கு பின்... சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் ரீ- என்ட்ரி கொடுக்கும் ஜெனிலியா!

சுருக்கம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின் திரையுலகில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியே இருந்த நிலையில், தற்போது மீண்டும் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின் திரையுலகில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியே இருந்த நிலையில், தற்போது மீண்டும் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் திரையுலகில், தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பது ஒரு சில நடிகைகளே.... அந்த வகையில் நடிகை ஜெனிலியா சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில் தன்னுடைய துரு துரு நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.

தமிழ் மற்றும் இன்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். இந்நிலையில் இவர் Tere Naal Love Ho Gaya என்கிற படத்தில் நடித்த போது, நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் காதல் மலர்ந்தது. இவர்களுடைய காதல் திருமணத்திலும் முடிந்தது.

கடந்த 2012 ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின், ஒப்புக்கொண்ட படங்களை மட்டுமே நடித்து முடித்து கொடுத்தார்.  பின் குழந்தைகள் பெற்று கொண்டு, குழந்தை கவனிப்பி ஈடுபட்டார்.

மேலும், ஒரு சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நட்புக்காக சிறப்பு வேடங்களில் நடித்துவந்த இவர், 8 வருடங்களுக்கு பின், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதன் படி... கடந்த வருடம் பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படம் தெலுங்கில் உருவாக உள்ளது. 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட உள்ள இந்த படத்தை. பிரபாஸை வைத்து 'சாஹோ' படத்தை இயக்கிய, இயக்குனர் சுஜித் இயக்க உள்ளார். இந்த படத்தில் மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தான் ஜெனிலியா நடிக்க உள்ளாராம். ஜெனிலியா கடைசியாக தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான, 'வேலாயுதம்' படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் முதல் பராசக்தி வரை: பொங்கலுக்கு போட்டி போடும் டாப் 5 படங்களின் பட்டியல்!
என்னை மன்னிச்சிடு கார்த்திக்; நீ இல்லாமல் வாழ முடியாது; விஷம் குடித்து உயிருக்குப் போராடும் ரேவதி!