Vijay Sethupathi 50: விஜய் சேதுபதி நடிக்கும் 50-ஆவது படம் 'மகாராஜா'! டைட்டில் லுக் வெளியானது!

Published : Jul 12, 2023, 06:52 PM IST
Vijay Sethupathi 50: விஜய் சேதுபதி நடிக்கும் 50-ஆவது படம் 'மகாராஜா'! டைட்டில் லுக் வெளியானது!

சுருக்கம்

'குரங்கு பொம்மை' படத்தின் இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகும் ‘மகாராஜா’ படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது.  

சினிமாவின் முக்கிய பிரபலங்கள் ஒரு படத்திற்காக ஒன்றிணையும் போது அது வர்த்தக வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ இதுபோன்ற ஒரு வலுவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் தனது திறமையை நிரூபித்த இயக்குநரான நிதிலன் சாமிநாதனுடன் விஜய் சேதுபதி இணைந்துள்ள படம்தான் ‘மகாராஜா’. 

என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களை தயாரித்தவர்! எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைவுக்கு கமல் இரங்கல்!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் பல படங்களைத் தந்த ’பேஷன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம் இந்தப் படத்தைத் ’தி ரூட்’ ஜெகதீஷ் பழனிச்சாமியுடன் இணைந்து தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி போன்ற முன்னணி நடிகர்கள் மற்றும் திறமை வாய்ந்த தொழில்நுட்பக்குழு என்ற சிறந்த கூட்டணியைக் கொண்டுள்ளதால், இந்தப் படமானது பான்-இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் டிரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய் சேதுபதியின் 50 படமான இப்படத்தின் டைட்டில் லுக் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தரமான அரசியலுக்கு தயாராகும் தளபதி விஜய்! இரவு நேர பாடசாலை தொடங்குவது எப்போது? வெளியான சூப்பர் தகவல்!

அதன்படி இப்படத்திற்கு ’மகாராஜா’ என தலைப்பிட்டுள்ளனர் படக்குழுவினர். மேலும் இதுகுறித்த போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி உருவம் செஸ் காயின் பிரதிபலிப்பில் உள்ளது. ஒரு கழுகு புகைப்படமும் இதில் இடம்பெற்றுளளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக அனுராக் காஷ்யப், நட்டி (நட்ராஜ்), ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக மம்தா மோகன்தாஸ், நடித்துள்ளார். மேலும் அபிராமி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன், சரவணன் சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, கல்கி, காளையன் மற்றும் இன்னும் பலர் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?