
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மாவீரன்' திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியானது. இதில் அரசியல் கட்சியை சிவகார்த்திகேயன் எதிர்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற அரசியல் கட்சியின் கொடி, கிட்ட தட்ட, இந்திய ஜனநாயக கட்சியின் கொடியின் நிறத்தில் இருந்ததால், தங்களின் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக 'மாவீரன்' படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இப்படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், IJK கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி, " இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில், படத்தின் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது". நாளை மறுநாள் படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால்... இப்போதைக்கு திரையரங்குகளில் போடப்படும் படத்தில் மாற்றம் செய்வது இயலாத ஒன்று என்பதால், ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியாகும் போது கொடியின் நிறத்தை மாற்ற உத்தரவிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன், படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். யோகிபாபுவின் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கி உள்ளார். தன்னுடைய முதல்படமான மண்டேலா படத்துக்காக 2 தேசிய விருதுகளை மடோன் அஸ்வின் வாங்கியுள்ளதால், இரண்டாவதாக இவர் இயக்கியுள்ள 'மாவீரன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தரமான அரசியலுக்கு தயாராகும் தளபதி விஜய்! இரவு நேர பாடசாலை தொடங்குவது எப்போது? வெளியான சூப்பர் தகவல்!
இந்த படத்தில் பிரபல இயக்குனர் மிஷ்கின், அரசியல்வாதியாகவும் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். மாவீரன் ஒரு பேண்டஸி திரைப்படமாக உருவாகி உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் காமிக் ஆர்டிஸ்ட்டாக நடித்துள்ளார். மிகவும் அமைதியான குணம் படைத்த சிவகார்த்திகேயன், வானத்தில் இருந்து கேட்கும் அசரீரி குரலை கேட்டு எப்படி மாவீரனாக மாறி அநீதிக்கு எதிராக பொங்கி எழுகிறார் என்பதை, விறுவிறுப்பான கதைக்களத்துடன் இயக்கியுள்ளார் மடோன் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.