ரஜினி - கமல் நடித்த 16 வயதினிலே பட தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜாகண்ணு காலமானார்

By Ganesh A  |  First Published Jul 12, 2023, 2:50 PM IST

பாரதிராஜா இயக்கத்தில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடித்த 16 வயதினிலே படத்தினை தயாரித்த எஸ்.ஏ.ராஜாக்கண்ணு காலமானார்.


பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 16 வயதினிலே. அப்படம் அவருக்கு மட்டுமின்றி அதில் நடித்த ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கமல்ஹாசன் ஆகியோருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அத்தகைய ஒரு மாஸ்டர் பீஸ் படத்தை தயாரித்தவர் தான் எஸ்.ஏ.ராஜாகண்ணு. 

கடந்த 1977-ம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து கிழக்கே போகும் ரயில், கன்னி பருவத்திலே, மகாநதி, பொண்ணு புடிச்சிருக்கு போன்ற படங்களை இவர் தயாரித்தார். 77 வயதான தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜாகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Latest Videos

இதையும் படியுங்கள்... உங்களோட படம் பண்ணது ஒரு அதிசயம் அப்பா... லால் சலாம் ஷூட்டிங்கை நிறைவு செய்த ரஜினி குறித்து ஐஸ்வர்யா நெகிழ்ச்சி

நடிகை ராதிகா பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், என்னுடையை முதல் படமான கிழக்கே போகு ரயில் படத்தில் என்னை அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.ராஜாகண்ணு. என்னுடைய சினிமா பயணத்தில் மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறார். அவர் மீது மிகுந்த மரியாதையும், அற்புதமான நினைவுகளும் என்றென்றும் இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

my first producer for my debut film , who is a big part of my journey in films. Have great respect and wonderful memory of him always. Pray for his soul to rest in peace 🙏🙏 pic.twitter.com/DNgbfbhmQh

— Radikaa Sarathkumar (@realradikaa)

பாரதிராஜா இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது :"16 வயதினிலே"திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல் என பாரதிராஜா பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... அரசியல் கனவில் இருக்கும் விஜய்யை முதல்வனாக்க பிளான் போடும் ஷங்கர்? 11 ஆண்டுகளுக்கு பின் இணையும் மாஸ் கூட்டணி

click me!