ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான வண்னம் உள்ளன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தில் தற்போது பிஸியாக இருக்கிறார். இந்த சூழலில் நடிகர் தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான வண்னம் உள்ளன. மேலும் ஒரு இளம் ஹீரோவுடன் சென்னை ரிசார்ட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காணப்பட்டதாக கூட தகவல் வெளியானது. அந்த இளம் நடிகரையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2-வது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த தகவல் அனைத்தும் வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் பிரபல ஆங்கில டிஜிட்டல் ஊடகத்திடம் பேசிய போது இந்த தகவலை தெரிவித்துள்ளனர். மேலும் " ஐஸ்வர்யா 2-வது திருமணம் குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. அவற்றில் எந்த உண்மையும் இல்லை. அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை." என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பாத யாத்திரை... அரசியல் எண்ட்ரிக்கு முன் தளபதி விஜய் செய்ய உள்ள தரமான சம்பவம்
முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்களின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், அவர்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்யவில்லை. ஐஸ்வர்யா தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். இந்த ஆண்டு ஏப்ரல், நடந்த சிஎஸ்கே போட்டியில் கலந்துகொண்டார்கள். இதுதொடர்பான வீடியோவை ஐஸ்வர்யா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
இதனிடையே மே 8 அன்று, லைகா நிறுவனம், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டது. முன்னதாக ரஜினிகாந்த் இந்த படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இப்படத்தில் ரஜினியின் கதாப்பாத்திரத்தின் பெயர் மொய்தீன் பாய் என்றும் கூறப்பட்டது.லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு தற்போது படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘நா ரெடி’ டான்ஸ் வீடியோவால் ஜாதி சர்ச்சையில் சிக்கிய VJ ரம்யா.. ட்ரோல் செய்த நெட்டிசன்கள்..