தமன்னாவை போல் கவர்ச்சி உடையில் காவாலா டான்ஸ்... என்ன சிம்ரன் இதெல்லாம் - ரசிகர்களை கன்பியூஸ் ஆக்கிய AI வீடியோ

By Ganesh A  |  First Published Jul 12, 2023, 9:23 AM IST

ஜெயிலர் படத்துக்காக தமன்னா ஆடிய காவாலா பாடலுக்கு நடிகை சிம்ரன் ஆடியதுபோன்ற AI வீடியோ வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.


நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இதில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. ஜெயிலர் பட ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளதால் அப்படம் குறித்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஜெயிலர் படத்திற்காக அனிருத் இசையமைத்த காவாலா என்கிற பாடல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தமன்னா கவர்ச்சி நடனம் ஆடியுள்ள இந்த பாடல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. குறிப்பாக தமன்னா போட்டுள்ள ஹுக் ஸ்டெப் மிகவும் பேமஸ் ஆனதால், அதற்கு பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட வண்ணம் உள்ளன. இதைப்பார்த்த தமன்னா தன் பங்கிற்கு ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

Latest Videos

இதையும் படியுங்கள்... ரூல்ஸ் மீறிய நடிகர் விஜய்.. வைரலான வீடியோ.. தளபதி மீது அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போக்குவரத்து போலீசார்..!

இந்த நிலையில், தமன்னா வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ போல் நடிகை சிம்ரன் காவாலா பாடலுக்கு நடனமாடியது போன்ற ரீல்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் படு வைரல் ஆனது. இதைப் பார்த்த ரசிகர்கள், சிம்ரன் வேறலெவலில் டான்ஸ் ஆடி இருப்பதாக பாராட்டி கமெண்ட் செய்து வந்தனர். ஆனால் உண்மையில் சிம்ரன் அப்பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிடவே இல்லை. அது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ என அறிந்த பின் ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயினர்.

This is just brilliant 😍😍😍 love https://t.co/K0agh3R4Tp

— Tamannaah Bhatia (@tamannaahspeaks)

சிலரோ இது நிஜமாவே சிம்ரன் போல் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர். சிலரோ இது பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், இதன் பின் விளைவுகளை நினைத்து பார்க்கும் போது கவலையாக உள்ளது என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நடிகை தமன்னாவும் இந்த வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதேபோல் நடிகை காஜல் அகர்வால் காவாலா பாடலுக்கு நடனமாடுவது போன்ற வீடியோவும் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Kajal Aggarwal edition pic.twitter.com/wydz6AYbTU

— Senthil Nayagam (@senthilnayagam)

இதையும் படியுங்கள்... கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய அட்லீ... ஜவான் பார்த்து மெர்சலாகி சம்பளத்தை வாரி வழங்கிய ஷாருக்கான்!

click me!