தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை தயாரித்த, தயாரிப்பாளர் ராஜாகண்ணு மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாரதி ராஜா இயக்குனராக அறிமுகமான 16 வயதினிலே திரைப்படத்தை தயாரித்து மிகவும் பிரபலமானவர் தயாரிப்பாளர் ராஜாகண்ணு. இதை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், கன்னிப்பருவத்திலே, மகாநதி, வாலிபமே வா, பொண்ணு புடிச்சிருக்கு எங்க சின்ன ராசா போன்ற ஏராளமான வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தன்னுடைய திரைப்படத்தின் மூலம் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்திய பெருமை .எஸ்.ஏ. ராஜாகண்ணுவை சேரும்.
77 வயதாகும் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜாகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகவே அவதி பட்டுவந்தாக கூறப்படும் நிலையில், இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனும் ட்விட்டர் மூலம், தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். எஸ்.ஏ.ராஜாகண்ணு மறைவு குறித்து அவர் போட்டுள்ள பதிவில்... "ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும்… pic.twitter.com/MZPjVay0rc
— Kamal Haasan (@ikamalhaasan)