ரஜினி சாதனையை அடித்து துவம்சம் செய்த விஜய்!!! வசூலில் எந்திரன், கபாலியை வெச்சு செய்யும் சர்கார்

By sathish kFirst Published Nov 13, 2018, 2:08 PM IST
Highlights

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் சர்கார். படம் தொடர்ந்து சர்ச்சைகளைச் சந்தித்த நிலையில் படத்தில் அதிமுக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததாக புதிய சர்ச்சை கிளம்பியது.  

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் சர்கார். படம் தொடர்ந்து சர்ச்சைகளைச் சந்தித்த நிலையில் படத்தில் அதிமுக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததாக புதிய சர்ச்சை கிளம்பியது. சர்கார் பிரச்சினை அரசியல் ரீதியா பல திருப்புமுனைகளை சந்திச்சாலும், வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த எந்திரன் 2010ஆம் ஆண்டு வெளியானபோது  பெரிய நடிகர்கள் நடித்த எந்தப் படமும் வெளிவராத காரணத்தால் தியேட்டர்கள் எந்திரன் படத்தைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே சூழலை சன் பிக்சர்ஸ் இந்த ஆண்டு தீபாவளி அன்று திரையரங்குகளுக்கு ஏற்படுத்தி வெற்றி கண்டது.

தமிழகத்தில் 80 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டிருந்த சர்கார் 600 திரைகள் வரை திரையிடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு புதுப் படம் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களால் சர்கார் படத்தை கடந்து வேறுபடம் பார்க்கும் சூழலை உருவாக்க விடவில்லை சன் பிக்சர்ஸ்.

பிரம்மாண்டமான விளம்பரங்கள், படத்திற்கு எதிரான ஆளும் அதிமுகவின் போராட்டம் இவை அனைத்தும் சர்கார் படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கியன. முதல் நாள் மட்டுமல்ல நேற்று வரை அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாகவே தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

படத்திற்கு ஆதரவாக, எதிராகப் பேசியவர்கள் கட்டணக் கொள்ளையைப் பற்றிப் பேசவில்லை. உலகம் முழுவதும் சர்கார் 200 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அதற்குப் பின் உள்ள சட்ட மீறலை, கட்டணக் கொள்ளையை எந்த ஊடகமும் குறிப்பிடவில்லை. தமிழகத்தில் சர்கார் தீபாவளி அன்று ரூ.30.68 கோடியும் இரண்டாம் நாள் ரூ.22.18 கோடியும் மூன்றாம் நாள் ரூ.10.68 கோடியும் நான்காம் நாள் ரூ.9 கோடியும் ஐந்தாம் நாள் ரூ.9.80 கோடியும் 6ஆம் நாள் ரூ12.25 கோடியும், 7ஆம் நாள் ரூ8.5 கோடியும் வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வசூல் விபரங்களை அறிவிக்கவில்லை. தமிழகம் தவிர்த்து வெளி மாநிலம், வெளிநாடுகளில் சர்கார் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் ரஜினி, விஜய் நடித்த படங்களின் முந்தைய சாதனைகளை சர்கார் வசூல் முறியடித்து முதல் இடத்திற்கு வந்துள்ளது. இந்த படத்தின் மூலம் 6 முறை 100 கோடி வசூல் சாதனை புரிந்த தமிழ் நடிகர் எனும் சிறப்பு அந்தஸ்தை விஜய் அடைந்துள்ளார். துப்பாக்கியில் தொடங்கி கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார் என விஜய் நடித்த ஆறு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. முன்னதாக தமிழில் நடிகர் ரஜினிகாந்த், 5 முறை 100 கோடி வசூல் படங்களை கொடுத்து முதல் இடத்தில் இருந்த சாதனையை விஜய், சர்கார் படம் மூலம் முறியடித்து உள்ளார்.

click me!