எதிர்க்கிற 10 பேர் பலசாலியா..? அந்த ஒருத்தர் பலசாலியா....? ரஜினிகாந்த் அதிரடி கேள்வி..!

By thenmozhi gFirst Published Nov 13, 2018, 1:12 PM IST
Highlights

நடிகர் ரஜினிகாந்த் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார்....! அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தாறுமாறாக அவருக்கே உண்டான ஸ்டைலில் பதில் கொடுத்தார் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார்....! அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தாறுமாறாக அவருக்கே உண்டான ஸ்டைலில் பதில் கொடுத்தார் ரஜினிகாந்த்.

நேற்று பெங்களூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, 7 பேர் விடுதலை பற்றி கேட்டனர். அதற்கு ரஜினியோ, எந்த 7 பேர் என கேள்வி எழுப்பினார். அதற்கு அடுத்தப்படியாக, பாஜகவிற்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டணி பலமாக அமைய வாய்ப்பு உள்ளதே...பாஜக என்ன அவ்வளவு ஆபத்தான கட்சியா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த்... அவங்களுக்கு அது ஆபத்தான கட்சி தான் என கூறினார். இந்த நிலையில், நேற்று ஏழு பேர் விடுதலை குறித்து பேசிய ரஜினியின் கருத்து பரவலாக பேசப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான அந்த ஏழு பேரை கூடவா ரஜினிக்கு தெரியாது என கிண்டலாக பேசப் பட்டு சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.

இதனை தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளிக்க இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கேள்வி கேட்கும் போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் என கேள்வி கேட்டிருந்தால் பரவாயில்லை....அதைவிட்டுவிட்டு அந்த ஏழு பேர் பற்றி என்றால் என்ன சொல்வது..? தெரியாது என்றேன்... பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் போனில் பேசி ஆறுதல் கூறினேன் நான்.... இது கூட தெரியாத அளவிற்கு முட்டாள் இல்லை நான் என கூறினார் ரஜினிகாந்த்.

இதற்கு அடுத்த படியாக பாஜக ஆபத்தான கட்சி என்று சொன்னீர்களே என்ற கேள்வி பற்றி மீண்டும் கேட்கப் பட்ட போது கூடுதலாக அவருக்கே உண்டான ஸ்டைலில் பதில் கொடுத்தார்.

அதாவதுங்க...பாஜக ஆபத்தான கட்சி என்று நான் சொல்ல வில்லை....அவர்களை எதிர்க்கும் கூட்டணி  கட்சிக்கு தான் அந்த கட்சி ஆபத்தானதாக உள்ளது என்றார். அது எப்படி சாத்தியம் என இன்னொரு  செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, எதிர்க்கிற 10 பேர் பலசாலியா..? அந்த ஒருத்தர் பலசாலியா..? என ஒரே  லைனில் தூள் பறக்கும் பஞ்ச் பேசி உரையை முடித்துக்கொண்டார் ரஜினிகாந்த்.

ஆக மொத்தத்தில், நேற்று காங்கிரஸ் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை காட்டாததையும், பாஜவிற்கு ஆதரவு கொடுப்பதையும் தெரிந்துக்கொள்ளும்படியாக உள்ளது ரஜினிகாந்தின்  பதிலடி.
 

click me!