‘அரசியல்ல நீ இன்னும் கொஞ்சம் வளரணும் தம்பி’... ரஜினியைக் கலாய்க்கும் கஸ்தூரி

By thenmozhi gFirst Published Nov 13, 2018, 1:05 PM IST
Highlights

தமிழக அரசியலில் ரஜினியின் குரு சோ.ராமசாமி என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரது உண்மையான குரு விசுதான். அந்த அளவுக்குத்தான் தமிக அரசியல் குறித்து ரஜினிக்கு ஞானம் இருக்கிறது’ என்று அல்டிமேட்டாய் ரஜினியைக் கலாய்க்கிறார் ட்விட்டர் சுந்தரி கஸ்தூரி.

தமிழக அரசியலில் ரஜினியின் குரு சோ.ராமசாமி என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரது உண்மையான குரு விசுதான். அந்த அளவுக்குத்தான் தமிக அரசியல் குறித்து ரஜினிக்கு ஞானம் இருக்கிறது’ என்று அல்டிமேட்டாய் ரஜினியைக் கலாய்க்கிறார் ட்விட்டர் சுந்தரி கஸ்தூரி.

’எந்த 7பேர்?’ என்று ரஜினி கேட்ட கேள்வி ட்விட்டர் ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் ஆகி பலரும் ரஜினியைக் கலாய்த்துக்கொண்டிருக்க கஸ்தூரி மட்டும் விட்டுவைப்பாரா என்ன? இதுகுறித்து பதிவிட்ட கஸ்தூரி... “தமிழகத்தில் 20 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரைத் தெரியாமல் எப்படி இருக்க முடியும்? திருவாளர் ரஜினியின் இதயம் சரியான இடத்தில் இருக்கலாம். இருந்தாலும், அவர் தமிழக நிகழ்வுகளில் இன்னும் கொஞ்சம் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். 

இது ஒன்றும் அப்பாவித்தனம் இல்லை. இது அறியாமை. இன்னும் மோசமாகச் சொல்ல வேண்டும் என்றால் அக்கறையின்மை. ரஜினி சாரின் பொறுப்புணர்ச்சி குறித்து எல்லோரும் என்னிடம் விளக்கிக் கொண்டிருக்கின்றனர்.  அவருக்கு அந்த 7 பேர் யாரென்றே தெரியாது என்று நான் சொல்லவில்லை. அவரே ஒப்புக் கொள்கிறார்,

அந்த விவகாரத்தில் நடப்பு விஷயத்தை அறியவில்லை எனக் கூறுகிறார். இது முதல்வர் ஆசை கொண்ட ஒருவருக்கு நிச்சயமாகப் பொருத்தமானது அல்ல. இதற்குப் பதிலளிக்க எந்த விளக்கத்தையும் சொல்லத் தேவையில்லை. கடந்த சில நாட்களில் செய்திகளை வாசித்திருந்தாலே எந்த 7 பேர் என்பதையும் அவர் தெரிந்து கொண்டிருக்கலாம். பத்திரிகையாளர்களும் கேள்வியில் மிகத் தெளிவாக ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை எனக் குறிப்பிட்டுக் கேட்கின்றனர். 

மன்னிக்கவும் ரஜினி ரசிகர்களே... நீங்கள் எல்லோரும் எவ்வளவுதான் முட்டுக்கொடுத்தாலும், ரஜினியைக் காப்பாற்றமுடியாது’ என்று போல்டாய் வம்பிழுக்கிறார் கஸ்தூரி. மொத்தத்தில் ரஜினியைப் பார்த்து ‘அரசியல்ல நீ இன்னும் கொஞ்சம் வளரணும் தம்பி’ என்று கஸ்தூரி சொல்வதுபோலவே தொனிக்கிறது.

click me!