விஜய் வாங்கும் சம்பளத்தில் முக்கால்வாசி கறுப்பு பணம்... வெளுத்தெடுத்த எஸ்.ஏ.சி.யின் உதவி இயக்குநர்!

Published : Nov 13, 2018, 01:56 PM IST
விஜய் வாங்கும் சம்பளத்தில் முக்கால்வாசி கறுப்பு பணம்... வெளுத்தெடுத்த எஸ்.ஏ.சி.யின் உதவி இயக்குநர்!

சுருக்கம்

இப்போது மட்டுமல்ல, பல வருடங்களாகவே விஜய் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். இது மட்டும் சரியா? ஆக தான் வாங்கும் பல கோடி சம்பளங்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசியை கள்ளப் பணமாக, கள்ள கணக்கில் பெறும் விஜய் எப்படி அரசாங்கத்தைப் பார்த்து குற்றம் சொல்லலாம்?

தமிழ்நாட்டில் இப்போ டிரெண்டிங் விஜய்தான்!... எந்த பக்கம் திரும்பினாலும் விஜய் புராணம்தான் பேசுகிறார்கள். இதில் பாதி அவரை புகழ்ந்து என்றால் மீதி அவரை திட்டித் தீர்க்கின்றன. 

அந்த வகையில், அ.தி.மு.க.வின் கலைப்பிரிவு இணையச்செயலாளரான இயக்குநர் நாஞ்சில் அன்பழகன் ஒரு பேட்டி தட்டியுள்ளார். இவர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் ரசிகன், தேவா ஆகிய படங்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அந்த ரூட்டில் அப்பா - மகன் இருவருடனும் சில காலத்துக்கு முன்பு வரை ஏக நெருக்கமாக இருந்தவர். அதன் பின் இவர்களுக்குள் ஏதோ மனக்கசப்பு என்கிறார்கள். இப்போது அ.தி.மு.க.வில் இணைந்து, ஓரளவு நல்ல பொசிஷனில் இருக்கும் அன்பழகன் கிடைத்திருக்கும் வாய்ப்பை வைத்து விஜய்யை வெளுத்து வாங்கியிருக்கிறார் இப்படி...

 

“எஸ்.ஏ.சி.யின் உதவி இயக்குநராக இருந்த வகையில் அவர்கள் இருவரின் நிஜ முகங்களும் எனக்கு நன்றாக தெரியும். விஜய்யை வைத்து சினிமாவில் பெரிதாய் சம்பாதிக்க ஆசைப்பட்டார் அவர் அப்பா. அது நடந்தது. அதன் பின் இப்போது அரசியலில் அவரை இறக்கி எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என்று பேராசைப்படுகிறார். இவ்வளவு கூடாது.  

அரசாங்கம் தப்பாக நடக்கிறது என்று வாய் பேசும் விஜய் என்ன ரொம்ப ரொக்கமா? ஒரு உண்மையை சொல்லட்டுமா?... விஜய் வாங்கும் சம்பளத்தில் 40% மட்டுமே கணக்கில் வரக்கூடிய வெள்ளைப் பணம். மீதி அறுபது சதவீத பணமும் கறுப்புப் பணம்தான். இப்போது மட்டுமல்ல, பல வருடங்களாகவே விஜய் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

இது மட்டும் சரியா? ஆக தான் வாங்கும் பல கோடி சம்பளங்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசியை கள்ளப் பணமாக, கள்ள கணக்கில் பெறும் விஜய் எப்படி அரசாங்கத்தைப் பார்த்து குற்றம் சொல்லலாம்? அவர் எங்களைப் பார்த்து ஒரு விரலை நீட்டினால், அவரது கையில் மீதி மூன்று விரல்கள் அவரை நோக்கி நீண்டு குற்றவாளியாக அடையாளம் காட்டுகிறது. அதுவே உண்மையும் கூட.

  

விஜய்யின் படம் ரிலீஸாகும் போதெல்லாம் ரசிகர்களை உசுப்பிவிட்டு, கசக்கிப் பிழிந்து தன் மகனை கடவுள் போல் ஆராதிக்க வைப்பதே சந்திரசேகரின் பொழுதுபோக்கு. இவர்களைப் பற்றி பேசுவதானால் இன்னும் இன்னும் நிறைய பேசுவேன்.” என்று வெளுத்திருக்கிறார். இவரது குற்றச்சாட்டுக்களுக்கு விஜய்யின் அப்பாவிடம் பதில் கேட்டபோது, அந்த நபர் தனக்கு நிகரானவரில்லை என்று சொல்லி பதிலளிக்க மறுத்துவிட்டாராம். ப்பார்றா! என்னா எஸ்கேப்பு!...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!