குடும்பத்தோடு மதம் மாறிய விஜய் பட நடிகர் சாய் தீனா ..! என்ன காரணம்..?

Published : Nov 09, 2022, 01:00 PM IST
குடும்பத்தோடு மதம் மாறிய விஜய் பட நடிகர் சாய் தீனா ..! என்ன காரணம்..?

சுருக்கம்

பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா குடும்பத்துடன் மதம் மாறியுள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.  

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறியப்பட்டாலும், நிஜத்தில் ஹீரோ என புகழப்படுபவர் நடிகர் சாய் தீனா. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, 'விருமாண்டி' படத்தில் மூர்க்கமான ஜெயில் வார்டன் கதாபாத்திரத்தில் நடித்து, தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதை தொடர்ந்து புதுப்பேட்டை, தலைநகரம், எந்திரன், ஆரண்யகாண்டம், ராஜா ராணி, மாஸ்டர், தெறி, மெர்சல், என சுமார் 30க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி, பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறார். நடிகர் தீனா அதிகம் வசதி படைத்த நடிகர் இல்லை என்றாலும், லட்ச கணக்கில் சம்பளம் பெரும் நடிகர் இல்லை என்றாலும்... ஒவ்வொரு படத்திற்காக பெரும் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை, ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், உடல் நலம் இல்லாதவர்களுக்கு செலவழிப்பதற்காகவும், முதியோர் மருத்துவ செலவுகள், போன்ற நற்காரியங்களுக்கு ஒதுக்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மணிகண்டன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த தனலட்சுமி... இந்த வாரமும் குறும்படம் போடுவாரா கமல்?

இவருக்கு இருக்கும் இந்த தங்க குணத்திற்காகவே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ரீலில் வில்லனாக நடித்தாலும், நிஜத்தில் ஹீரோவாக இருக்கும் சாய் தீனா, திடீர் என தன்னுடைய குடும்பத்துடன் மதம் மாறியுள்ள தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முத்தம் கேட்டு டார்ச்சர் பண்ணிய ராபர்ட் மாஸ்டருக்கு தரமான பதிலடி கொடுத்த ரச்சிதா

தீனா தற்போது இந்து மாதத்தில் இருந்து... புத்த மதத்திற்கு மாறியுள்ளார். புத்த மத துறவி ஒருவருடன் சாய் தீனா தன்னுடைய மனைவி, மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. திடீர் என இவர் புத்த மதத்திற்கு மாற என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் விரைவில் இது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய இந்த முடிவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், சிலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?
பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!