
தளபதி விஜய், 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, கருப்பு கோட் - சூட் அணிந்தபடி மிகவும் ஸ்டைலிஷாக சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை லீலா பேலஸில் நடைபெற்று வரும், இசை வெளியீட்டு விழாவில், படக்குழுவினர் மற்றும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இசை வெளியீட்டு விழா 6 : 30 மணிக்கு சன் டிவி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ள நிலையில், ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவில் நடக்கும் சம்பவங்களை, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் உடனுக்குடன் அப்டேட் செய்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: விருது விழா மேடையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா! வைரலாகும் வீடியோ!
அந்த வகையில், விஜய் மேடைக்கு வந்ததும்... அவருடைய அம்மா மற்றும் அப்பாவை கட்டி பிடித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்திய வீடியோ... சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த இசைவெளியீட்டு விழாவில், தளபதி விஜய் என்ன பேசுவார் என்பதும் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம், ஏற்கனவே 'பிகில்' பட பிரச்சனை சம்மந்தமாக ஐடி ரெய்டு விஜய் வீட்டில் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக கடந்த வாரம் வருமான வரி துறை அதிகாரிகள் கிட்ட தட்ட 8 மணிநேரம் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: 17 வருடத்திற்கு பின் 'மாஸ்டர்' படத்திற்காக விஜய்யுடன் இணைந்த பிரபலம்!
எனவே, இதன் பிரபதிப்பளிப்பாக விஜய் ஏதேனும் பெறுவாரா? நெட்டிசன்கள் பலர் ஒரு கேள்வியை முன் வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.