சூப்பர் ஸ்டாரையே வச்சி செஞ்சவரு... தளபதிய சும்மா விடுவாரா...? அனிருத் பெயரைக் கேட்டாலே அலரும் மாஸ் ஹீரோஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 15, 2020, 04:19 PM IST
சூப்பர் ஸ்டாரையே வச்சி செஞ்சவரு... தளபதிய சும்மா விடுவாரா...? அனிருத் பெயரைக் கேட்டாலே அலரும் மாஸ் ஹீரோஸ்...!

சுருக்கம்

இதை தெரிஞ்ச நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் சும்மா விடுவாங்களா...?. சோசியல் மீடியாவில் வீடியோ மீம்ஸா போட்டுத் தள்ளுறாங்க. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ஒரு குட்டி கதை நேற்று வெளியானது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. யூ-டியூப், டுவிட்டர் என அனைத்து சோசியல் மீடியாவிலும் பட்டையைக் கிளப்பி வரும் குட்டி கதை பாடல், இதுவரை 7 மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. 

இதையும் படிங்க: சாய்பல்லவி கொடுத்த முத்தத்தால்... திக்குமுக்காடி போன சமந்தா புருஷன்... வைரலாகும் செம்ம ரொமாண்டிக் பாடல்...!

பாடல்கள் முழுவதும் ஆங்கிலத்தில் இருந்ததால், சில தமிழ் வார்த்தைகளை கூட கவனமாக தேட வேண்டியிருந்தது. கொஞ்சம் புரியுற மாதிரியும், நிறைய புரியாத மாதிரியும் இருந்த இந்த பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். அப்போது தான் அனிருத் மறுபடியும் காப்பி அடித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இதையும் படிங்க: கல்யாணம் ஆனாலும் இன்னும் லவ்வர்ஸ் தான்... பிக்பாஸ் பிரபலத்தின் லவ்வர்ஸ் டே ஸ்பெஷல் கிளிக்ஸ்...!

இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் மாஸ் கூட்டணியில் உருவான தர்பார் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார். சூப்பர் ஸ்டாரின்  இன்ட்ரோ சாங்கான சும்மா கிழி பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே இதே பஞ்சாயத்து தான் ஆரம்பமானது. ஐயப்பன் பாடலை காப்பியடித்து சூப்பர் ஸ்டார் பாட்டுக்கு டியூன் போட்டுவிட்டார் அனிருத் என நெட்டிசன்கள் கலாய்த்தனர். 

அதே குரூப்பு தான் இப்போதும் செம்ம ஹார்ட் வொர்க் செய்து, தளபதியின் குட்டி கதை பாடலுக்கான டியூனை எங்கிருந்து அனிருத் எங்கிருந்து சுட்டார் என்று கண்டுபிடித்துள்ளனர். அது என்ன பாட்டுன்னா...? நம்ம வடிவேலு, ரம்யா கிருஷ்ணன் நடிச்ச ராஜகாளியம்மன் படம் நியாபகம் இருக்க. அதில வர்ற சந்தன மல்லிகையில் பாடலைத் தான் அப்பட்டப்பட்ட காப்பியடிச்சிருக்கார் ராக் ஸ்டார் அனிருத். 

 
இதை தெரிஞ்ச நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் சும்மா விடுவாங்களா...?. சோசியல் மீடியாவில் வீடியோ மீம்ஸா போட்டுத் தள்ளுறாங்க. சூப்பர் ஸ்டாரையே விட்டு வைக்காதவரு, தளபதியையா? விடப்போறாரு...! 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Gabriella Charlton : சுடிதாரில் இவ்ளோ அழகை காட்ட முடியுமா? சீரியல் நடிகை கேப்ரியால்லாவின் போட்டோஸ் பாருங்க!
Nikhila Vimal : வாய் பிளக்க வைக்கும் 'வாழை' பட நடிகை நிகிலா விமல் அழகிய போட்டோஸ்..