இப்படி ஒரு வேலையா...100 நாள் தூங்கும் வேலைக்கு ரூ.ஒரு லட்சம் சம்பளம்…23 பேர் தேர்வு!

By Asianet TamilFirst Published Feb 15, 2020, 2:46 PM IST
Highlights

ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வீதம் 100 நாட்கள் தூங்கும் வேலைக்கு 23 ேபர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் ஊதியம் தரப்படஉள்ளது.
 

ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வீதம் 100 நாட்கள் தூங்கும் வேலைக்கு 23 ேபர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் ஊதியம் தரப்படஉள்ளது.

பெங்களூருவில் உள்ள வேக் ஃபிட்  என்ற நிறுவனம் இந்த வேலையை வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் செய்த விளம்பரத்தைப் பார்த்து    30 நாடுகளில் இருந்து 1.7 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

மும்பை, பெங்களூரு, நோய்டா, ஆக்ரா, குர்கான், டெல்லி, சென்னை, புனே, போபால் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களும், அமெரிக்கா, ஸ்லோவோகியா நாடுகளைச் சேர்ந்தவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்  பட்டதாரியாக இருக்கவேண்டும். வகுப்பு பாடம் கேட்கும் பொழுதும்கூட தூங்க கூடிய திறமை கொண்டவர்களாக அவர்கள் படிக்கும்போது இருந்திருக்க வேண்டும்.

படிப்பை முடித்த பிறகு தலையணையில் தலை சாய்த்த பத்து முதல் இருபது நிமிடங்களுக்குள் தூங்க கூடியவராக இருக்க வேண்டும்.

எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் தூங்குகிற பழக்கம் இருக்க வேண்டும்  சப்தம், வெளிச்சம், அலாரம் அடித்தல், மணி ஓசை இவை கேட்டாலும் அவர்கள் தலையணையில் தலை வைத்த 20 நிமிடத்திற்குள் தூங்கிவிட வேண்டும். தூங்கும் வேலைக்கு விண்ணப்பித்த இவர்கள், தாங்கள் ஏற்கெனவே பார்க்கும் வேலையை ராஜினாமா செய்ய வேண்டாம்.  அவரவர் வீட்டில் தூங்கினால் போதும். தங்கள் வீட்டில் தூங்க ஆரம்பிக்கும் பொழுது வேக் ஃ பிட் கம்பனி தரும் ஒரு கருவியை பொருத்திக்கொள்ள வேண்டும். அந்தக் கருவி தூக்கத்தின் தன்மையை தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டே இருக்கும். மூடிய கண்ணுக்குள் விழிகள் சுழல்வதையும்  அந்தக் கருவி பதிவு செய்யும் .

மொத்தமாக 1.7 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததில் முதல் சுற்று முடிந்த பிறகு 2,500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில்1500 பேர் ேதர்வு செய்யப்பட்டு அதிலிருந்து  23 பேரை 4 பேரைக் கொண்ட ஒரு தேர்வு குழு தேர்வு செய்தனர்.

இவர்களுக்கு தூக்கத்தை பதிவு செய்யும் கருவி கையில் தரப்பட்டது. இவர்களுக்கு  வேக் ஃபிட் நிறுவனத்தின் படுக்கை விரிப்பும்  தலையணைகளும் அனுப்பி வைக்கப்படும். அவை கிடைத்ததும் 10 நாட்களுக்குள் இவர்கள் 100 நாள் தூக்க வேலையைத் துவக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பி இருக்கிறார்கள்.

click me!