கோவில்பட்டியில் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, மேளதாளம் முழங்க பாலாபிஷேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சத்தியபாமா, சண்முகா, லெட்சுமி என 3 திரையரங்குகளில் உள்ள 7 ஸ்கீரின்களில் இத்திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து மேள தாளம் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி விஜய் படத்திற்கு மாலை அணிவித்து, வண்ண வண்ண கலர் மத்தப்புகளை படத்திற்கு காண்பித்து மகிழ்ந்தனர். அதுமட்டுமின்றி டி.ஜே, வீலிங் என்று அசத்திய ரசிகர்கள், விஜய் படத்திற்கு பாலாபிஷேகமும் செய்தனர். விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் கோவில்பட்டியில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் திருவிழாக்கோலம் பூண்டது.
கோவில்பட்டியில் களைகட்டிய லியோ கொண்டாட்டம் pic.twitter.com/Yi9TUZDWK4
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
undefined
அதுமட்டுமின்றி லியோ படத்திற்காக கோவில்பட்டியை சேர்ந்த செல்வின் சுந்தர் என்பவர், அப்படத்தின் முதல் டிக்கெட்டை ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்து வாங்கியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் நடத்தும் இலவச பயிலகத்திற்கு நிதி உதவி செய்யும் வகையில் தான் இவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கியதாக செல்வின் சுந்தர் கூறினார்.
இதையும் படியுங்கள்... கோவில்பட்டியில் லியோ படத்தின் ஒரு டிக்கெட் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை; காரணம் தெரிஞ்சா நீங்களே பாராட்டுவீங்க!