பொறுப்புள்ள அம்மாவாக... மகனை மடியில் படுக்க வைத்து தாலாட்டும் நயன்தாரா - வைரலாகும் கியூட் வீடியோ

Published : Oct 19, 2023, 02:27 PM IST
பொறுப்புள்ள அம்மாவாக... மகனை மடியில் படுக்க வைத்து தாலாட்டும் நயன்தாரா - வைரலாகும் கியூட் வீடியோ

சுருக்கம்

நடிகை நயன்தாரா, தனது மகனை மடியில் படுக்க வைத்து தாலாட்டி தூங்க வைத்ததை வீடியோவாக எடுத்து விக்னேஷ் சிவன் வெளியிட்டு உள்ளார்.

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த திருமணம் செய்துகொண்ட இவருக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளன. இந்த இரண்டு குழந்தைகளையும் வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்டார் நயன்தாரா. உயிர், உலக் இருவருக்கும் தற்போது 1 வயது ஆகிறது. அண்மையில் தான் இருவரது முதல் பிறந்தநாளை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி கோலாகலமாக கொண்டாடியது.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்களுடன் பிசியாக நடித்து வந்தாலும், தன் மகன்களுடன் நேரத்தை செலவிட தவறுவதில்லை. தற்போது நடிகை நயன்தாரா, மண்ணாங்கட்டி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யூடியூப்பர் டியூடு விக்கி என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நயன்தாரா உடன் யோகிபாபுவும் நடிக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுதவிர இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம் நயன். ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் நயனுக்கு பாலிவுட்டிலும் மவுசு அதிகரித்து உள்ளதாம். இதனால் பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா, தன் மகனை தாலாட்டி உறங்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நீச்சல் குளம் அருகே இருக்கையில் கால் நீட்டி அமர்ந்துள்ள நயன்தாரா, தன்னுடைய மகன் உயிரை மடியில் படுக்க வைத்து, அவரை தாலாட்டி தூங்க வைக்கிறார். இதனை வீடியோ எடுத்துள்ள விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின் எமோஜிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  கோவில்பட்டியில் லியோ படத்தின் ஒரு டிக்கெட் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை; காரணம் தெரிஞ்சா நீங்களே பாராட்டுவீங்க!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?