லிகர் படத்துக்காக நிர்வாணமாக நடித்த விஜய் தேவரகொண்டா.. ஆடையின்றி இருக்கும் போஸ்டர் பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்

By Asianet Tamil cinema  |  First Published Jul 2, 2022, 2:17 PM IST

vijay deverakonda : லிகர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளது.


தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் விஜய் தேவரகொண்டா. இதையடுத்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் டோலிவுட்டில் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்டார் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் தற்போது லிகர் படம் தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள்... பிரபல சீரியல் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சமையல்காரர் - சின்னத்திரையை உலுக்கிய பகீர் சம்பவம்

Tap to resize

Latest Videos

இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும் , நடிகை சார்மியும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்... பட வாய்ப்புகள் குறைந்ததால்...மீண்டும் அண்ணனுடன் 2-ம் பாகத்தில் இணைய திட்டமிட்ட ஜெயம் ரவி!

இதுதவிர தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு வில்லனாக உலக புகழ்பெற்ற பாக்ஸர் மைக் டைசன் நடித்துள்ளார். 

இதையும் படியுங்கள்... Aishwarya: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓப்பனாக சொன்ன ஹெல்த் சீக்ரெட்...இதெல்லாம் ட்ரை பண்ணுங்கோ..அப்பறம் பாருங்க

லிகர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கையில் ரோஜா பூங்கொத்துடன் நிர்வாணமாக நிற்கும் படியான போட்டோ இடம்பெற்றுள்ளது. இதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போகினர். 

click me!