பிரபல சீரியல் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சமையல்காரர் - சின்னத்திரையை உலுக்கிய பகீர் சம்பவம்

By Asianet Tamil cinema  |  First Published Jul 2, 2022, 1:48 PM IST

குடித்துவிட்டு தரக்குறைவாக தங்களது குடும்பத்தை பற்றி அந்த சமையல்காரர் பேசுவதாக குற்றம்சாட்டியுள்ள மஹி, போலீஸ் அவனை கைது செய்த பின்பும் அவன் ஜாமினில் வெளியே வந்துவிட்டான் என தெரிவித்துள்ளார்.


இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மஹி விஜ், இவரது மனைவி ஜெய் பனுசாலியும் சில தொடர்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தாரா என்கிற 2 வயது மகளும் உள்ளார். இவர்கள் இருவரும் வசித்து வரும் வீட்டில் சமையல் வேலை செய்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒருவரை நியமித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Ponniyin selvan : வருகிறான் சோழன்... மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ பட அப்டேட் வந்தாச்சு

Tap to resize

Latest Videos

அந்த சமையல்காரர் மீது தான் நடிகர் மஹி அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். அவர் வீட்டில் இருக்கும் பொருட்களையெல்லாம் திருடுவதாக தெரிவித்துள்ள மஹி, அந்த சமையல்காரர் தன்னையும், குடும்பத்தினரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டுவதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... 2 முறை விவாகரத்து பெற்ற நடிகையுடன் 4-வது திருமணமா? - உண்மையை போட்டுடைத்த 60 வயது நடிகர்

அவர் திருடுவது தெரிந்ததும் 3 நாட்களில் வேலையை விட்டு தூக்கிவிட்டோம். அவர் சம்பளம் கேட்டபோது 3 நாட்களுக்கு உரிய சம்பளத்தை கொடுத்தால், தனக்கு 1 மாதத்திற்கான சம்பளம் தர வேண்டும் இல்லை என்றால் வெளியே 200 ஆட்களை வைத்திருப்பதாக மிரட்டுகிறார் என வேதனையுடன் தெரிவித்துள்ளார் மஹி.

இதையும் படியுங்கள்... சோமேட்டோ மூலம் ரசிகர்களுக்கு இலவசமாக ட்ரீட் வைத்த அனிருத்

குடித்துவிட்டு தரக்குறைவாக தங்களது குடும்பத்தை பற்றி அந்த சமையல்காரர் பேசுவதாக குற்றம்சாட்டியுள்ள மஹி, போலீஸ் அவனை கைது செய்த பின்பும் அவன் ஜாமினில் வெளியே வந்துவிட்டான். அவனால் எங்களது குடும்பத்துக்கும், எனது குழந்தைக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!