Ponniyin selvan : வருகிறான் சோழன்... மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ பட அப்டேட் வந்தாச்சு

By Asianet Tamil cinema  |  First Published Jul 2, 2022, 12:56 PM IST

Ponniyin selvan : கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படியாக வைத்து இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் மணிரத்னம். 


மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பாலாஜி சக்திவேல், ஜெயராம், ரகுமான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்... 2 முறை விவாகரத்து பெற்ற நடிகையுடன் 4-வது திருமணமா? - உண்மையை போட்டுடைத்த 60 வயது நடிகர்

Tap to resize

Latest Videos

லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படியாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... Dil Raju : 51 வயதில் தளபதி 66 பட தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு பிறந்த வாரிசு - குவியும் வாழ்த்துக்கள்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தஞ்சையில் உள்ள பெரிய கோவிலில் நடத்த படக்குழு திட்டமிட்டமிட்டிருந்தது. பின்னர் அதனை கைவிட்டது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 50 நாட்களே எஞ்சி உள்ள நிலையில், அப்டேட்டுகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இதனால் ரசிகர்கள் அப்டேட் எப்போது வரும் என கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையும் படியுங்கள்... காதல் மனைவி நயன்தாரா உடன் காத்துவாக்குல ரொமான்ஸ் பண்ணும் விக்னேஷ் சிவன் - வைரலாகும் போட்டோஸ்

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி அப்படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் ‘வருகிறான் சோழன்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் அடுத்த வாரம் வெளியாக உள்ளதை படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Look out! Brace yourself.
Get ready for an adventure filled week!
The Cholas are coming! 🗡 pic.twitter.com/uLYPJ4Z0LC

— Madras Talkies (@MadrasTalkies_)
click me!