Vijay Birthday : மகன் விஜய் பிறந்தநாளில் தாயார் ஷோபா செய்த சிறப்பு பூஜை.! வீடியோ இதோ

Published : Jun 22, 2025, 02:54 PM IST
vijay mother shoba special pooja

சுருக்கம்

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தாயார் ஷோபா செய்துள்ள சிறப்பு பூஜையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Vijay Birthday

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது இவர் தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியை துவங்கியுள்ளார். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடவுள்ளது. மாபெரும் இளைஞர் பட்டாளத்தை கவர்ந்துள்ள விஜய் இந்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பாக இறுதியாக ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். இன்று (ஜூன் 22) விஜயின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு சார்பில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றே வெளியிடப்பட்டிருந்தது.

விஜயின் 51-வது பிறந்தநாள்

அதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் விஜய் காக்கிச்சட்டையுடன் உயர் அதிகாரியாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ள படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளது. நேற்று இரவே முதலே சமூக வலைதளங்களில் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தாயார் ஷோபா சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜையை நடத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரட்டூரில் தாய் ஷோபாவின் விருப்பப்படி சாய்பாபா கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்தார் விஜய். அங்கு சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடந்து மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

விஜய்க்காக சங்காபிஷேகம் செய்த ஷோபா

பின்னர் அந்தக் கோயிலுக்கு சென்று விஜய் வழிபாடு நடத்தி இருந்தார். விஜய் தீவிர சாய்பாபா பக்தர் என்று கூறப்படுகிறது. அவர் மும்பை செல்லும் பொழுது மறக்காமல் சீரடி சென்று வருவது வழக்கம் என்று பலரும் கூறுவது உண்டு. இந்த நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தாயார் ஷோபா விஜய்க்காக அந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி இருக்கிறார். 1008 சங்குகளை வைத்து பூஜை செய்யப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. நடிகர் விஜய்க்கு தனது தாயார் ஷோபா மீது மிகுந்த பாசம் உண்டு. தனது தந்தையுடன் சில காலம் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தனது தாயாரை அடிக்கடி சென்று சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு மேடையில் கூட விஜயிடம் இருந்து தனக்கு ஒரு ஹக் கிடைத்தால் போதுமென விஜயை கட்டி அணைத்துக் கொண்டு தனது அன்பை ஷோபா வெளிப்படுத்தி இருந்தார்.

மகன் விஜய் மீது அன்பைப் பொழியும் ஷோபா

சந்திரசேகர் படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்த காரணத்தினால் தனது தாயின் அரவணைப்பிலேயே விஜய் வளர்ந்துள்ளார். சந்திரசேகர் திரைத்துறையில் இருந்ததால் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே இருந்த நெருக்கம் குறைவாகத்தான் இருந்திருக்கிறது. அதனால் தான் அவர் தனது தாயாருடன் அதிக நெருக்கம் காட்டி வந்துள்ளார். ஷோபாவும் அடிக்கடி தனது மகனைப் பற்றி மேடைகளிலும், பேட்டிகளிலும் உயர்வாக பேசி வருகிறார். இந்த நிலையில் சினிமாவை முடித்துக் கொண்டு அரசியலுக்கு விஜய் நுழைந்தருக்கிறார். அரசியல் வருகைக்குப் வந்த பின் விஜய் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். திரைப் பயணம் போலவே அவரது அரசியல் பயணமும் வெற்றி பெற வேண்டும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

விஜய்க்கு குவியும் வாழ்த்துக்கள்

அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆலயங்களில் வழிபாடு நடத்தியும், ஏழை எளியவர்களுக்கு உணவு அளித்தும் விஜயின் 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தாய் ஷோபாவும் மகன் அரசியலில் மிகப்பெரிய வெற்றபெற வேண்டும் என்று விஜய் கட்டிக் கொடுத்த சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். 1008 சங்குகள் பூஜை செய்யப்பட்டு, அபிஷேகம், யாகங்கள் சிறப்பாக நடைபெற்றது. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படம் ‘படையப்பா’... எப்போ வெளியாகிறது தெரியுமா?
அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ